நூறு இளைஞர்கள்
இருந்தால்
புதிய பாரதம்
படைப்பேன் என்றார்
வீரத் துறவி
விவேகானந்தர்!
இளையோர்
இருந்தோம்
விவேகானந்தரைத் தேடி....
கண்டோம் அவரை – எம்
கண்காணிப்பாளர்
திரு. மைக்கேல்ராஜ் வடிவில்!
பாராட்டு என்பதை –
யாம்
பணிக்கு வந்தபின்
ஏட்டளவில்
மட்டும் கண்டோம் – இன்று
எளிமையான தமிழில்
நேருக்கு நேர்
அவையில்
முன்னிறுத்தி
அதிகாரியின் அதரங்கள்
வாயிலாய்
செவிக்கு
இனிமையாய்
சிந்தைக்கு பகுமானமாய்
செய்த பணிக்கு
வெகுமதியாய்
நிறைவான இந்நாள் (13.04.2016) – நம்
ஸ்ரீரங்க
கோட்டத்தின்
மறக்கவியலா
பொன்னாள்!
ஐயா!
உம் எண்ணத்தில்
உதிப்பதை
எம் கைவண்ணத்தில்
முடிப்போம்!
உமது கண்கள்
சொல்வதை
எமது கைகள்
முடிக்கும்!
நாட்டின்
பொருளியல் ஓங்க
நாம் அனைவரும்
கைகோர்ப்போம்!
நாளொரு மேனியும்
பொழுதொரு
வண்ணமாய் – நம்
கோட்டத்தை
உயர்த்துவோம்!
செங்கோட்டையில்
நம் துறை உயர
கடமை
உணர்ச்சியோடு
களம் இறங்குவோம்!
வெற்றி பெறுவோம்!
நன்றி !
ஜெய்ஹிந்த் !
சுபஸ்ரீ ,
ரெங்கநகர்
No comments:
Post a Comment