மாநிலச் சங்கத்தின் இடைவிடாத முயற்சிக்கு
10 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த வெற்றி !
"சும்மா வராது சுதந்திரம் !"

அஞ்சலகங்களின் அலுவல் நேரம் (BUSINESS HOURS ) என்பது , முற்றிலும் கணினி மயம் என்று மாற்றப்பட்ட பிறகு, கடந்த 2006 முதல் மாலை நான்கு அல்லது ஐந்து மணி வரை நீட்டிக்கப்பட்டது உங்களுக்குத் தெரியும். CHANGED BUSINESS ENVIRONMENT அடிப்படையில் வங்கிச் சேவைகள் போல இது செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் வங்கிப் பகுதிகளில் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் விடுமுறையாக அளிக்கப்பட்டன. இந்த சலுகை நாம் இலாக்காவில் நமக்கும் விஸ்தரிக்கக் கோரினோம். ஆனால் இது மறுக்கப்பட்டது.
மத்திய அரசுப் பணிகளில் அஞ்சல் துறை மட்டும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பணியாற்றிட வேண்டியுள்ளது. இதிலும் நிர்வாகப் பிரிவிற்கும், கணக்குப் பிரிவிற்கும் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறையே .
ரயில்வே போல 3 X 8 அல்லது 24 X 7 ENVIRONMENT க்கான மூன்று மடங்கு ஊழியர்கள் நம்மிடம் இல்லை. ஆனால் நம்முடைய நிர்வாகம் 'சட்டிக்குள் பானையை கழுவிட" நினைக்கிறது. 'கொள்ளு என்றால் வாயைத் திறக்கவும் கடிவாளம் என்றால் மூடிக் கொள்ளவுமான ' நிலையில்,' சலுகை கிடையாது குறைந்த ஊழியர்களை வைத்து, வேலை மட்டும் இரவு வரை வேண்டுமானாலும் செய்ய வேண்டும்' என்றும் இருக்கும் ஊழியர்களை வைத்தே 'கொத்தடிமையாக' 24 X 7 வேலை விரிவு படுத்திடவும் நினைக்கிறது.
எனவே அஞ்சல் துறைக்கான அடிப்படை சட்ட விதிகளின்படி சனிக்கிழமைகளில் BUSINESS HOURS குறைக்கப்படவேண்டும் என்று நம்முடைய மாநிலச் சங்கம் கடந்த 2015 இல் முதன் முதலில் RJCM கூட்டத்தில் பிரச்சினையை எடுத்தது. இது நிர்வாகத்தால் மறுக்கப்படவே, நம்முடைய அகில இந்திய சங்கத்தின் மூலம் SECRETARY POSTS அவர்களிடம் பிரச்சினை எடுத்துச் செல்லப்பட்டு , ஒன்று - வங்கிகள் போல இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் , இல்லையேல் - ஏற்கனவே இருந்ததுபோல அடிப்படை சட்ட விதிகளின் படி BUSINESS HOURS மாற்றப் படவேண்டும் என்றும் கோரினோம். இது ஏற்கப்பட்டு கடந்த 7.1.2016 அன்று இலாக்காவால் உத்திரவும் வெளியிடப்பட்டது.
ஆனால் மீண்டும் நம்முடைய மாநில நிர்வாகம், இப்படி செய்தால் இலாகாவின் BUSINESS மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் , இந்த முடிவை மறு பரிசீலனை செய்திட வேண்டும் என்றும் DIRECTORATE க்கு நேரடிக் கடிதம் (D.O. LETTER) எழுதியது . எனவே மீண்டும் RJCM இல் இந்தப் பிரச்சினை எடுக்கப்பட்டு,அதற்கு இலாக்கா உத்திரவு அமல்படுத்தப்படும் என்ற பதில் கொடுக்கப்பட்டு - ஆனால் அமல் செய்திட வேண்டாம் - என்ற தனியான உத்திரவு மாநில நிர்வாகத்தால் கீழ்மட்ட நிர்வாகங்களுக்கு அளிக்கப்பட்டது.
எனவே வேறு வழியில்லாமல் , கடந்த 28.7.2016 அன்று நடைபெற்ற RJCM கூட்டத்தில் கடுமையாக விவாதம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இறுதியில் CHIEF PMG அவர்கள் " எதிர்வரும் ஆகஸ்ட் 15 ந் தேதிக்குள் DIRECTORATE இல் இருந்து நிர்வாகத்திற்கு சாதகமான பதில் வரவில்லையென்றால் , DTE உத்திரவு நிச்சயம் தமிழகத்தில் அமல்படுத்தப்படும்" என்ற உறுதி மொழியை அளித்தார்.
அதன்படியே கடந்த 18.8.2016 அன்று CONFEDERATION தேசிய மாநாடு முடிந்த கையோடு நமது மாபொதுச் செயலருடன் சென்று CPMG அவர்களை நம் சந்தித்தோம். இதில் CASUAL LABOUR பிரச்சினை உள்ளிட்ட வேறு பல பிரச்சினைகளும் விவாதிக்கப்பட்டன. BUSINESS HOURS பிரச்சினையில் CHIEF PMG அவர்களிடம் 15 நாள் வாக்குறுதி அளித்தீர்களே என்று வினவியபோது , " I HAVE KEPT MY WORDS - I HAVE ISSUED ORDER" என்ற பதிலை நமக்கு அளித்தார். எனவே அதன் அடிப்படையில் கோட்ட/ கிளை செயலர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் உடன் தகவல் அனுப்பினோம், தற்போது கடந்த 18.8.2016 அன்று அளிக்கப்பட CPMG அலுவலக உத்திரவு, இலாக்கா உத்திரவு, PMG CCR அலுவலக உத்திரவு இவற்றை உங்களுக்கு கீழே தருகிறோம்.
இந்த உத்திரவு மேற்கு மண்டலத்தில் புதிதாக பொறுப்பேற்ற PMG WR அவர்களுடனான இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டி அன்றைய தேதியில், ஏற்கனவே நிலுவையில் இருந்த BUSINESS HOURS SUBJECT ஏற்கப்பட்டு உடனடியாக அமலாக உத்திரவு அளிக்கப்பட்டது உங்களுக்குத் தெரியும்.. மேற்கு மண்டல PMG அவர்களுக்கு நம் நன்றிகள் .
காலதாமதமானாலும் இறுதியில் உத்திரவினை அளித்திட்ட CPMG அவர்களுக்கும் நம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் . நாம் அதிக நேரம் வேலை செய்திட தயார் தான் . இலாகாவின் உயர்வுக்கு உழைத்திட நாம் தயார்தான். ஆனால் அதே நேரம் கொத்தடிமையாக அல்ல. உரிய உரிமைகள் மறுக்கப்படக் கூடாது. BUSINESS HOURS மாற்றினால் BUSINESS பாதிக்கும் என்று நிர்வாகம் நினைப்பதில் தவறில்லை. ஆனால் அதே நேரம் BANKING ENVIRONMENT வேண்டும் என்று நினைக்கும்போதே , BANKING பகுதியில் ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகையும் அஞ்சல் பகுதியில் விஸ்தரிக்கப்பட வேண்டும் என்று நினைத்தால் அனைவருக்கும் நலம் பயக்கும் அல்லாவா ?
ஊழியர்களின் இந்த விருப்பத்தைக்கூட கடிதம் எழுதும்போது DIRECTORATEக்கு சேர்த்தே எடுத்துச் சென்றிருந்தால் நிச்சயம் வரவேற்போம் .இது நியாயமான கோரிக்கைதானே ? மாநில நிர்வாகம் ஒருதலையாக இல்லாமல் இருபுறமும் சிந்திக்க வேண்டுகிறோம் .
கடந்த 28.7.2016 அன்று RJCM கூட்டத்தில் CPMG அவர்கள் அளித்த பதில் :-
SUBJECT NO. 31 - REPLY
REGARDING FIXING OF UNIFORM STANDARD WORKING HOURS IN ALL POST OFFICES, THE CLARIFICATION FROM DIRECTORATE HAS NOT BEEN RECEIVED SO FAR. AS IT IS A POLICY MATTER , A DECISION CAN BE TAKEN ONLY ON RECEIPT OF CLARIFICATION FROM DIRECTORATE. DIRECTORATE WILL BE REMINDED. IF WE DO NOT RECEIVE ANY REPLY BY 15.8.2016, WE WILL FOLLOW THE ORDER.

No comments:
Post a Comment