ஒரு நாள் வேலை நிறுத்தம் எதற்காக?.... உங்கள் சிந்தனைக்கு
ஜுலை 11ல் நடக்க இருந்த வேலை நிறுத்தத்தை தள்ளிவைத்து விட்டு இப்பொழுது செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு கொடுப்பதன் காரணம் என்ன?. அரசியல் காரணங்களுக்காக நடைபெறுகிற வேலை நிறுத்தம் இது என சொல்கிறார்களே! உண்மையா அது?. இந்த ஒரு நாள் வேலை நிறுத்தத்தினால் ஏதும் பயன் உண்டா?. நம்முடைய கோரிக்கைகள் ஏதும் அதில் உண்டா?. இது போன்ற எண்ணற்ற கேள்விகள், சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று சற்று உன்னிப்பாக, அக்கறையோடு பார்த்தோம் என்றால் பல விஷயங்களைப் புரிந்து கொள்ளமுடியும்.
வேலைநிறுத்தம் தள்ளிப்போடப்பட்டதற்கான காரணத்தை தலைவர்கள் சொல்லி இருக்கிறார்கள். மேலும் தள்ளிதான் போடப்பட்டிருக்கிறதே தவிர விலக்கிகொள்ளவில்லை எனவும் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். இது நமது பொதுசெயலாளர் கிருஷ்ணனின் வார்த்தைகள் இவை.
“All of us are aware that NJCA is not a monolithic, composite organization. It is a united forum of independent organisations. Each Federation has its own identity and individuality and take decision as per the direction of the managing bodies of each organization. Hence different views may emerge in the NJCA, but final decision is taken by consensus. If each organization sticks to its own stand and others to follow it, there is no question of consensus and NJCA will not exist”.
கூட்டுபோராட்டக்குழுவின் தலைவர் மிஸ்ராவின் வார்த்தைகள் இவை.
“Though there is positive assurance from the Govt. of India, but all of you will not take rest and assume counselling the cadre and ground staff that they should remain in full preparedness, because if there will not be satisfactory outcome, we will be having no alternative except to agitate the issues again.”.
மத்திய அரசு ஊழியர்களின் அகில இந்திய வெள்ளி விழா மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் அனைவரும் கீழ் கண்ட இந்த கருத்தை பிரதிபலித்தனர்.
”வேலைநிறுத்தம் தள்ளிவைக்கப் பட்டதால் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றத்தை, கோபத்தை புரிந்து கொள்ளமுடிகிறது என்றும், அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருக்கிறது என்றும் சொன்னார்கள். இந்த அரசு மட்டுமல்ல எந்த அரசும் தொழிலாளர் விரோத போக்கை கடைப்பிடிப்பதாகவும், அத்தகைய அரசுகளிடம் போராடித்தான் நம்முடைய உரிமைகளை பெற வேண்டி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். ஜுலை11 போராட்டம் மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட, அவர்களுடைய சம்பள உயர்வு பற்றிய போராட்டம். ஆனால், இந்த செப்டம்பர் 2 போராட்டம், பொதுமக்களின், உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகளுக்காக, அனைவரின் நலன்களுக்காக நடைபெறும் போராட்டம். தனியார்மயமாவதை தடுக்கவும், அன்னிய முதலீடுகள் என்ற பெயரில் நம் நாட்டை அடகு வைப்பதை தவிர்க்கவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை அடக்கிய பொது வேலை நிறுத்த போராட்டம் இந்த செப்டம்பர் 2 போராட்டம், இந்திய நாட்டின் குடிமகனாக, உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதிகளாக, சமுகத்தின் ஒரு அங்கத்தினராக அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியது அவசியம் என எடுத்துரைத்தனர்."
இன்றைய கோரிக்கைகள் என்ன என்பதனை போராடும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். ஆசை வார்த்தை கூறி உங்களை போராட்டத்திற்கு அழைக்கவில்லை. இன்றைய நிலையை எதார்தத்தை சொல்லுகிறோம். வெகுஜன இயக்கங்களில் நாம் பங்கேற்பது நாமும் ஒருவகையில் தொழிலாளிதான் என்பதனை பறைசாற்றுவதற்கு சமம் .
"ஒன்று எங்கள் ஜாதியே! ஓன்று எங்கள் நீதியே! உலக மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே!.
உனக்கொரு பங்கும், எனக்கொரு பங்கும் உலகில் நிச்சயம் உண்டு. ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும் (போராட்டத்தினாலும்).........."
AIPEU group C Tuticorin Dn
No comments:
Post a Comment