அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம் !
நம்முடைய மாநிலச் சங்கம், நேற்றைய தினம் இரவு மீண்டும் நம்முடைய சம்மேளன மாபொதுச் செயலரை தொடர்பு கொண்டு ஞாயிறு மற்றும் பண்டிகை விடுமுறை தினங்களில் பட்டுவாடாப் பணிக்கு ஊழியர்களை கொண்டுவரும் உத்திரவை ரத்து செய்திட இலாக்கா முதல்வருடன் உடன் பேசி முடிவு எடுத்திட வேண்டியது.
அதற்கான ஆதரவு ஆவணங்களாக பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு 2012 இல் நம்முடைய இலாக்கா அளித்த உறுதி மொழி மற்றும் அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் நடைமுறையில் இருந்த SPEED BOOKING மற்றும் DELIVERY ரத்து செய்திட்ட ஆவணங்களை சம்மேளன மாபொதுச் செயலர் வேண்டியதன் அடிப்படையில் EMAIL மூலம்
நாம் அனுப்பினோம்.
இதன் அடிப்படையில் இது குறித்து நடைபெற்ற முன்னேற்றங்களை நம்முடைய மாபொதுச் செயலர் இன்று மதியம் தொலைபேசியில் மாநிலச் செயலரிடம் தெரிவித்திட்டார். அதன் விபரம் கீழே பார்க்க :-
இன்று நம்முடைய சம்மேளன மாபொதுச் செயலர் DG (POSTS), MEMBER(P) மற்றும் MEMBER (O) ஆகியோரை நேரில் சந்தித்து இந்த உத்திரவை ரத்து செய்திட வேண்டினார். அதற்கான காரணங்களை விளக்கி உரிய ஆவணங்களையும் அளித்து விவாதித்தார். அதன் அடிப்படையில் தமிழகத்தில் மீண்டும் தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசிட அறிவுறுத்துவதாகவும் , இந்த தீபாவளி பண்டிகை விடுமுறை தினங்களில் பட்டுவாடாவை நிறுத்தி உத்திரவு விடுவதாகவும் உறுதி பெறப்பட்டது.
இதற்கான உத்திரவை இன்று மாலைக்குள் எதிர்பார்க்கலாம். ஒட்டு மொத்தமாக இந்த உத்திரவு ரத்து செய்யப்பட உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு நம்முடைய மாநிலச் செயலர் , பொதுச் செயலரை வேண்டியுள்ளார்.
பேச்சுவார்த்தையின் போது நம்முடைய மாபொதுச்செயலர் அளித்த கடிதத்தின் நகல் கீழே காணவும்.
ORDERS TO DELIVER E-TAIL ARTICLES BOOKED BY E-COMMERCE COMPANIES.
National Federation of Postal Employees
1st Floor North Avenue Post Office Building, New Delhi-110 001
Phone: 011.23092771 e-mail: nfpehq@gmail.com
Mob: 9868819295/9810853981 website: http://www.nfpe.blogspot.com
No. PF-67-19//2016 Dated: 27th October, 2016
To
Shri Ashutosh Tripathi,
Director General,
Department of Posts,
Dak Bhawan, New Delhi-110 001
Sub: Orders to deliver e-tail articles booked by e-Commerce Companies.
Sir,
It has been brought to our notice by Circle unions that the CPMGs have issued orders to deliver the e-tail articles booked by e-Commerce Companies on every Sunday, religious holidays and on the day of festival also.
In this connection we would like to draw your kind attention towards the decision taken on this subject in the Department Council meeting of JCM and instructions were issued to all heads of Circles in this regard vide Directorate letter No. 16/56/2011-SR dated 8th July,2011 which were again reiterated vide No. 08/15/20111-SR dated 09.11.2012.
Further it is also brought to your kind notice that the same reply was given by Secretary Post to the Parliamentary Standing Committee vide Directorate No. 16/51/2011-SR dated 08/7/2011 through Lok Sabha Secretariat.
But now all these orders are being defied by the Heads of Circles.
We are not against the development of Department. But the employees should not be deprived from their legitimate rights of availing weekly off and religious and festival holidays.
It is therefore requested to kindly cause suitable instructions in this regard and on the day of Deepawali officials should not be ordered to perform this duty.
A positive action is highly solicited .
With regards.
Yours faithfully,
Encl : As above
(R.N. Parashar)
Secretary General
No comments:
Post a Comment