NFPE

Wednesday, 18 January 2017


ஜல்லிக் கட்டுக்கு அனுமதி வழங்கிட வேண்டிய மாணவர் போராட்டம், வெறும் காளைகளை அடக்கும் நிகழ்வுக்கு அனுமதி வேண்டிய போராட்டமல்ல.  இது ஒரு இனத்தின் உரிமை மறுப்புக்கு எதிரான போராட்டம். கலாச்சார உரிமை மீறலுக்கு எதிரான போராட்டம். இன மானம் காத்திட தன்னிச்சையாக வெடித்துக் கிளம்பிய போராட்டம்.  மழுங்கிக் கிடந்த இளைஞர் சமுதாயத்தை கிளர்ந்து எழுந்திடச் செய்திட்ட போராட்டம். இனி வரும் காலத்தில் கார்ப்பரேட் கொடுமைகளுக்கெதிரான போராட்டமாக, அன்னிய, பன்னாட்டு பொருளாதார ஆக்கிரமிப்புகளுக்கு  எதிரான போராட்டமாக,  இளைஞர் சமுதாயத்தை எழுச்சியுறச் செய்திட இது வழி வகுக்கும் .... வழி வகுத்திட நாம் செய்திட வேண்டும்.... நல்ல வேளையாக உள் நோக்கம் உடைய  சில தீய அரசியல் கட்சிகள் இந்தப் போராட்டத்தை தங்களதாக மாற்றிட இளைஞர் சக்தி இடம் தரவில்லை. வேறு வழியில்லாமல் ஆதரவு தர வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப் பட்டுள்ளது, இளைஞர் சக்திக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். அடுத்த வெற்றியும் இளைஞர்கள்  நிச்சயம் பெறுவார்கள். இந்த நெருப்பு அணையாமல் காக்கப்பட வேண்டும். பெரும் புரட்சிக்கு இதுவே மூலாதாரம். இளைஞர் எழுச்சிக்கு முழு இதரவு அளிப்போம். மறுக்கப்பட்ட உரிமை மீட்டெடுப்போம். நம் பொங்கல் விடுமுறை மறுப்புக் கெதிரான போராட்டம்  இவை அனைத்திற்குமான  அடி நெருப்பு என்பது நமக்குப்
பெருமையே ! போராடும் கரங்களை நாம் வலுப்படுத்துவோம் ! ஆங்காங்கே கிளர்ந்தெழுந்து பேராதரவளிப்போம் ! அஞ்சல் ஊழியர் போராட்ட வடிவம் ஒன்றுபட்ட அறிவிப்பாக நாளை வெளியிடப்படும் !. .... புரட்சிவாழ்த்துக்களுடன் ....   NFPE தமிழ் மாநில அஞ்சல் முன்று சங்கம்.

No comments:

Post a Comment