NFPE

Friday, 20 January 2017

சல்லிக்கட்டு ஆர்ப்பாட்டம்....

தோழர்களே! தோழியர்களே!!  
வணக்கம்.

    ச ல்லிக்கட்டுக்கு எதிரான தடை என்பது கடந்த 3 ஆண்டுகளாகவே இருந்தாலும் இந்த ஆண்டு  தமிழ் இனத்தின் பண்பாட்டுக்கு எதிராகவும், கலாச்சாரத்திற்கு எதிராகவும் உள்ள சல்லிக்கட்டுக்கான தடையை நீக்க இன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் களமிறங்கியுள்ளது என்பது ஒரு சரித்திரமாகும். அந்த சரித்திரத்திலே  நம்முடைய பங்கு எதுவும் இல்லையே என ஏங்கிக்கொண்டிருந்த பொழுது தான் நமது சங்கங்களின் கூட்டுப்போராட்ட குழுவின் அறிவிப்பு நமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. 19.01.2017 இரவு தான் PJCA தன் போராட்டத் திட்டத்தை அறிவித்தது. அஞ்சா நெஞ்சுடைய நம் அஞ்சல் தோழர்களும், தோழியர்களும் மிகப் பெருமளவில் தமிழகம் முழுவதும் கலந்துக்கொண்டது நமது உணர்விற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியே.

  நமது திருவரங்க கோட்டத்தில் ஸ்ரீரங்கம், துறையூர் மற்றும் பெரம்பலூர் தலைமை அஞ்சலகங்களில் மட்டும்மல்லாமல் மண்ணச்சநல்லூர் LSG, முசிறி LSG, தொட்டியம் LSG துணை அஞ்சலகங்களிலும், காட்டுப்புத்தூர் துணை அஞ்சலகத்திலும் மிகச் சிறப்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  நமது திருவரங்க கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் புகைப்படங்கள் சில 

ஸ்ரீரங்கம் தலைமை அஞ்சலகம் 








துறையூர் தலைமை அஞ்சலகம் 







பெரம்பலூர் தலைமை அஞ்சலகம்






மண்ணச்சநல்லூர் LSG துணை அஞ்சலகம் 



முசிறி LSG துணை அஞ்சலகம்




தொட்டியம் LSG துணை அஞ்சலகம்



காட்டுப்புத்தூர் துணை அஞ்சலகம்




NFPE, Srirangam

No comments:

Post a Comment