திருவரங்கம் அஞ்சல் நான்கின் 25 - வது கோட்ட மாநாடு இன்று திருவரங்கம் தலைமை அஞ்சலகத்தில் காலை 11 மணியளவில் சங்க கொடியேற்றத்துடன் துவங்கியது. கோட்டச் செயலர் தோழர் R. சந்திரன் அவர்கள் ஈராண்டறிக்கையையும், தோழர் N. சேஷாத்திரி அவர்கள் வரவு செலவு கணக்கையும் அவையில் சமர்ப்பித்தார்கள். அதன் பின் நடைப்பெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வில் தோழர் R. சந்திரன் அவர்கள் தலைவராகவும், தோழர் G. சீனிவாசன் அவர்கள் கோட்டச் செயலராகவும், தோழியர் S. அல்லி அவர்கள் நிதிச் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் சார்பாகவும், திருவரங்க கோட்டத்தின் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment