அன்புத் தோழர்களே ! தோழியர்களே !
ஏற்கனவே நம்முடைய அஞ்சல் மூன்றின் அகில இந்திய செயற்குழுவுக்கு செல்வதற்கு முன்னர் உங்களுக்கு தமிழக அஞ்சல் மூன்றின் நிலைப்பாடு குறித்த பதிவினை ஆங்கிலத்தில் முகநூலிலும் whatsapp பக்கத்திலும் நாம் தெரிவித்திருந்தோம்.
மேலும் அகில இந்திய செயற்குழுவில் நடைபெற்ற விவாதங்கள் பற்றிய முடிவான கருத்துக்களையும் பகிர்ந்திருந்தோம்.
தற்போது நாளை (17.3.2017) அன்று இலாக்காவுக்கு அளிக்க உள்ள கோரிக்கை மனுவுக்கு நம்முடைய கருத்துக்களை தமிழக அஞ்சல் மூன்று சார்பாகவும் பொதுச் செயலரிடம் தெரிவித்திருக்கிறோம்.
அதில் சில முக்கியமான கோரிக்கைகள் குறித்த நமது கருத்து கீழே :-
1. கேடர் சீரமைப்பு உத்திரவை நடைமுறைப்படுத்துவது குறித்து நாடு முழுவதும் ஒரே சீரான நிலைப்பாட்டினை இலாக்கா அறிவிக்க வேண்டும்.
2. P.O. & RMS ACCOUNTANT, SYSTEM ADMINISTRATOR, MARKETING EXECUTIVE பகுதிகளிலும் உயர் பதவிகள் அடையாளப்படுத்தப் படவேண்டும்.
3. பெருநகரங்களில் உள்ள கோட்டங்கள் மற்றும் UNIT அலுவலகங்கலான GPO அண்ணாசாலை போன்ற பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைப்படி புதிய LSG பதவிகள் அதிகம் இல்லை என்பதால், எல்லா பகுதிகள் போல உரிய எண்ணிக்கையில் LSG பதவிகள் புதிய பகுதிகளான CPC, BPC, SPCC, CEPT, WCTC, CLEARING HOUSE, PLI, RPLI மற்றும் PHILATELY போன்ற பகுதிகளில் அடையாளப்படுத்தப் பட வேண்டும்.
4. NFG என்பது HSG I இல் 2 ஆண்டு சேவை முடித்தவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திலேயே வழங்கப்பட வேண்டும். புதிதாக பதவிகள் அடையாளப்படுத்தி அவர்களுக்கு இடமாற்றம் அளிக்கக்கூடாது.
5. HSG I இல் IP LINE பதவிகள் ஏற்கனவே ஒழிக்கப்பட்டுவிட்டதால் அந்தப் பதவிகளையும் HSG I GENERAL LINE பதவிகளில் கொண்டுவர வேண்டும்.
6. HSG II மற்றும் HSG I பணி நியமன சட்டத்தை தளர்த்தி தற்போது கீழ் நிலை பதவிகளில் உள்ள அனைவருக்கும் ஒரு நேர தளர்வாக உயர் பதவிகளில் பணி நியமன உத்திரவு அளித்திட வேண்டும்.
7. பதவி உயர்வுக்கான குறைந்த பட்ச சேவைக்காலம் என்பது குறைக்கப்பட வேண்டும்.
8. பணப்பயன் இல்லாத காரணத்தால் தேவையில்லாத இடமாறுதல்களை தவிர்க்கும் பொருட்டு LSG மற்றும் HSG II பதவிகளை கோட்ட மட்ட பதவிகளாக அறிவிக்க வேண்டும்.
9. புதிய பதவி உருவாக்கம் என்பதால் தற்போது அளிக்கப்படும் பதவி உயர்வுகளுக்கு BENCH MARK ‘ VERY GOOD’ என்பது தளர்த்தப்படவேண்டும்.
10. அறிவிக்கப்படும் உயர் பதவிகளில் பணியாற்ற நேரிடும் அடுத்த நிலையில் உள்ள ஊழியருக்கு OFFICIATING PAY வழங்கிட தெளிவான உத்திரவு அளிக்க வேண்டும்.
11. உடல் நிலை காரணமாகவோ, குடும்ப சூழல் காரணமாகவோ உயர் பதவியை DECLINE செய்பவருடைய கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும். கட்டாயப் படுத்துதல் கூடாது.
12. மாறியிருக்கும் CBS , CIS, CSI விதிகளின் படியும் LSG SUPERVISOR தன்மையை கருதியும் இனி ஒரு நபர் அஞ்சலகங்கள் அனைத்தும் இரு நபர் அஞ்சலகங்களாக்கப்பட வேண்டும்.
13. POSTMASTER GRADE பதவிகள் HSG II , HSG I க்கு இணையாக அடுத்த நிலைக்கு உயர்த்தப்பட வேண்டும். தற்போது அதில் பணியாற்றும் ஊழியருக்கு குறைந்த பட்ச சேவைக்காலம் தளர்த்தப்பட்டு ஒரு நேர தளர்வாக, அடுத்த நிலை பதவி உயர்வு அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.
14. இந்த மாற்றங்களுக்கான DOPT ஒப்புதல் பெறும் வரை அல்லது இந்த மாற்றங்களை செய்திடும் வரை தற்போதைய கேடர் சீரமைப்பு உத்திரவை நிறுத்தி வைக்க வேண்டும்.
15. இடைக்காலத்தில் இந்த மாற்றங்கள் செய்ய வேண்டி வரும் வாய்ப்பு உள்ளதால், இவை முடியும் வரை இந்த ஆண்டுக்கான சுழல் மாறுதல் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.
நம்முடைய கருத்துக்கள் போல இதர மாநிலச் சங்கங்களிடமிருந்தும் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.
இவற்றை நம்முடைய தலைவர்கள் தோழர். M. கிருஷ்ணன், தோழர். KVS ஆகியோருடன் கலந்து நம்முடைய அஞ்சல் மூன்றின் பொதுச் செயலர் தோழர். பராசர் அவர்கள் நாளை கோரிக்கை மனுவாக இலாக்காவிடம் அளித்து பேச உள்ளார்.
கூடுமானவரை FNPO சம்மேளனத்துடனும் கலந்து இந்த கோரிக்கை மனு அளித்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முறையான கோரிக்கை மனு தயார் செய்யப்பட்டு இலாக்காவுக்கு அளிக்கப்பட பின்னர் அதன் நகல் நம்முடைய அகில இந்திய சங்கத்தினால் அதன் வலைத்தளத்தில் வெளியிடப்படும். நாளைய பேச்சு வார்த்தையின் முடிவுகளும் அவ்வாறே அறிவிக்கப்படும்.
நல்ல முன்னேற்றங்களை எதிர்பார்க்கிறோம்.
தோழமையுடன்
NFPE அஞ்சல் மூன்று சங்கம்,
தமிழ் மாநிலம்.
No comments:
Post a Comment