NFPE

Wednesday, 26 April 2017

கேடர் சீரமைப்பு... மீண்டும் விவாதம்....

அன்புத் தோழர்களுக்கு ,  இனிய மாலை வணக்கம்.

கேடர் சீரமைப்பு உத்திரவு அமலாக்கம் தற்போது ஒத்தி வைக்கப்பட்டது குறித்து மீண்டும் இரு வேறு விவாதங்கள் சிலரால் துவக்கப் பட்டுள்ளன. 

இது இளைய தோழர்கள் மற்றும் மூத்த தோழர்கள் மத்தியில் நம் இயக்கத்துக்குள்ளேயே பிரிவினையாக ஏற்படுத்திட அல்லாமல் வேறு நோக்கம் இல்லை. 

தற்போது சமூக தளங்களில் இளைய தோழர்களை உசுப்புபவர்கள், இதற்கு முன்னர் மூத்த தோழர்கள் பாதிக்கிறார்கள் என்று கூக்குரலிட்டு அவர்களை உசுப்பியவர்கள்தான் என்பதை நம்மால் மறந்துவிட முடியாது.

எந்த நேரத்திலும் எதிலும் செயல்படாதவர்களின் வெற்று வார்த்தைகள்தான் இவை என்பதை நம் சங்க நிர்வாகிகள் இளைய தோழர்களிடம் எடுத்துக் கூறிட வேண்டுகிறோம். 

கேடர் சீரமைப்புத் திட்டத்தை முதலில் கேட்டதும் நம் தலைமை.

அதற்கான செயல்திட்டம் முதலில் அளித்ததும் நம் தலைமை. 

தொடர்ந்து எட்டு ஆண்டுகள் போராடி உத்திரவு பெற்றதும் நம் தலைமை. 

அமல்படுத்துதலில் பிரச்னைகள் வந்த போதும் , பிரச்னைகளைத் தீர்த்து வைத்து மூத்த  தோழர்கள், இளைய தோழர்கள் இருவருக்கும் நன்மை பயக்கும் வண்ணம் சரியான திட்ட முன்வடிவு கொடுத்து மாற்றம் செய்து தர கோரியதும் நம் தலைமை. 

முறையான பேச்சு வார்த்தை நடத்தி சரியான முறையில் அனைத்து தரப்பினருக்கும் நன்மை பயக்கும் வகையில் மாற்றங்களை செய்திட வேண்டியும் , அதுவரை அமலாக்குவதை ஒத்தி வைக்க வேண்டியதும் நம் தலைமை. நாம் தொழிற் சங்கத்தில் பொது நன்மை கருதி செயல்படுகிறோம். 

இந்தப் பிரச்னையில் நம் சங்க நிலைப்பாடு குறித்து ஏற்கனவே கடந்த 09.04.17 அன்று மிகத் தெளிவாக நம்முடைய மாநிலச் சங்க நான்கு பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளோம். 

ராய்காரில் கடந்த 08, 09.03.17 தேதிகளில் நடைபெற்ற  நம் அகில இந்திய செயற்குழுவில் நடைபெற்ற நீண்ட விவாதங்கள் குறித்தும் அதன் முடிவுகள் குறித்தும் ஏற்கனவே கடந்த 10.03.2017 அன்று NFPE P3 TN Circle Union குழுவில் நம் மாநிலச் சங்கம் பதிந்துள்ளதை நீங்கள் இப்போதும்  பார்க்கலாம்.

இதேபோல கடந்த 17.03.2017 அன்று நம் சம்மேளன மாபொதுச் செயலரும், FNPO மாபொதுச் செயலரும் சேர்ந்தே அளித்த கடிதத்திலும் இவையே குறிப்பிடப் பட்டுள்ளன. 

எனவே நம் சங்க நடவடிக்கையிலோ, நிலைப்பாட்டிலோ ஆரம்பம் தொட்டு இன்று வரை எந்தவித மாற்றமும் இல்லை, குழப்பமும் இல்லை என்பதை உணர வேண்டுகிறோம். 

உங்கள் பார்வைக்கு நம் 09.04.2017 சுற்றறிக்கையையும் 17.03.2017 சம்மேளன கடித நகலையும் மீண்டும் பிரசுரிக்கிறோம். சரியாகப் படிக்காதவர்கள ஊன்றிப் படிக்க வேண்டுகிறோம்.

எனவே திசை திருப்பி பிளவு வாதம் செய்திடும் உள் நோக்கமுடைய நபர்களின் பதிவுகளை நம் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். 

நம் சங்தத்தின் கடிதம் மற்றும் சுற்றறிக்கையை முழுமையாகப் படித்து , குழப்பமுள்ளவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுகிறோம். மூத்த மற்றும் இளைய தோழர்களிடையே குழப்பம் செய்திட எண்ணும் சூது மதியாளர்களை புறந்தள்ளிட வேண்டுகிறோம். 

தோழமையுடன்

அஞ்சல் மூன்று சங்கம், (NFPE)
தமிழ் மாநிலம்.

No comments:

Post a Comment