NFPE

Tuesday 19 February 2013

வேலை நிறுத்தம் வெல்லட்டும் !

நாடு தழுவிய அளவில் 10 கோடி தொழிலாளர்களுக்கு மேல் , எந்த வித அரசியல் பாகுபாடும் இல்லாமல் எதிர் வரும் பிப்ரவரி 20 மற்றும் 21 தேதிகளில் நடைபெறவுள்ள 48 மணி நேர வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்ள உள்ளார்கள்.

ஆளும் கட்சியான இந்திய தேசிய காங்கிரசின் அங்கீகரிக்கப் பட்ட தொழிற் சங்கமான INTUC இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதும் அதன் இணைப்பு சங்கமான அஞ்சல் பகுதியின் FNPO இந்த வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்துவதும் இதற்கு உதாரணமாகும். எப்போதும் தனியே நிற்கும் தோழர். மகாதேவையா தலைமையில் ஆன AIPEDEU சங்கமும் இந்த வேலை நிறுத்தத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளதாக அவரது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் தனியார் மயக் கொள்கைகளை தடுத்திட நாம் தொடர் போராட்டங்கள் பல காலமாக நடத்தி வந்துள்ளோம். NATIONAL POSTAL POLICY 2012 என்பது அறிவிக்கப்பட்டு , PPP என்று சொல்லப்படும் PRIVATE -PUBLIC -PARTNERSHIP என்ற கொள்கை அஞ்சல் துறையில் தன்னிச்சையாக அறிவிக்கப் பட்டுள்ளது உங்களுக்கு தெரிந்திருக்கும். INDIA POST வலைத்தளத்தில் இது பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ் நிலையில் தனியார் கூரியர் நிறுவனங்களுக்கு அஞ்சல் சேவையில் பங்கு என்பது தற்போது பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது. ஒவ்வொரு அஞ்சலகத்திலும் கூரியர் நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கிக் கொடுக்க இந்த வரைவு வழி வகை செய்துள்ளது . இதனை நாம் எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நாம் மட்டுமே தனியாக போராடினால் மத்திய அரசின் கொள்கை முடிவுகளை எதிர்த்திட முடியுமா என்பதை உங்களின் சிந்தனைக்கு விடுக்கிறோம்.

நாடு முழுதும் உள்ள கோடிக்கணக்கான மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் , அமைப்பு சாரா ஊழியர்கள், பாதுகாப்புத்துறை ஊழியர்கள் திரண்டெழுந்து போராடும் போது நாம் மட்டும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாமா ?

இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் , பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்தால் , நாம் போராடும் போது எவர் வருவார் என்பதை சிந்திக்க வேண்டுகிறோம் .

எப்போதும் போல நம்மில் ஒரு சிலர் இது அரசியல் கட்சிகளின் போராட்டம் என்று கூறி , ஊழியர்களை பிளவு படுத்த நினைப்பது எந்த வகையில் சரி என்பதை உங்களின் சிந்தனைக்கே விடுகிறோம் .

நாளை BSNL போல நமது துறையும் சீரழிக்கப் படும் . BSNL ஊழியர்கள் , அவர்களது துறை காக்க போராடும் காலமெல்லாம் அதனை கொச்சைப் படுத்திய சில பிளவு வாத சக்திகள் , இன்று 4 ஆண்டுகளாக அந்த ஊழியர்களுக்கு BONUS நிறுத்தப் பட்டுள்ளதற்கு என்ன பதில் சொல்வார்கள் . போதிய நிதி இல்லை என்று கூறி BSNL இல் மாத சம்பளமே சில மாதங்களுக்கு முன்னர் நிறுத்தப் பட்டது உங்களுக்கு நினைவிருக்கும் . அவர்களுக்கு LTC கிடையாது . தற்போது ஒரு லட்சம் ஊழியர்கள் உபரி என்று அறிவிக்கப் பட்டு VRS இல் செல்ல நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள்.

இது போல நமது துறையிலும் , கூரியர் நிறுவனங்களுக்கு கதவு திறந்து விடப்பட்டு , CBS திட்டம் மூலம் கிளை அஞ்சலகங்கள் வரை centralised server உடன் இணைக்கப் படுமானால் , துணை அஞ்சலகங்களில் வேலை பாதியாகக் குறையும் . தலைமை அஞ்சலகங்களில் SBCO, SO SB BRANCH, MO PAID BRANCH போன்றவை இருக்காது.  ECS மூலம் சம்பளம் உட்பட அனைத்து ஊழியர் BILL களும் பட்டு வாடா செய்யப் படும் போது ACCOUNTS BRANCH எப்படி இருக்கும் ? அப்போது ஊழியர்கள் உபரி என்று இந்த இலாக்காவும் , அரசாங்கமும் அறிவிக்க எவ்வளவு நேரம் ஆகும் ? BSNL போல நமக்கும் போனஸ், சம்பள நிறுத்தம் வருமா வராதா ? இந்தக் கொடுமை எல்லாம் எதிர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறதா இல்லையா ? இதனை எதிர்க்க இந்திய தேசமெங்கும் அனைத்து பகுதி ஊழியர்களும் அணி திரளும் போது, நாம் மட்டும் ஒதுங்கிக் கொள்ளலாம் என்று சிலர் பிரச்சாரம் செய்வது கோழைத்தனமா? குழு மனப்பான்மையா ?

பொது நன்மை தேவையா ? தனி மனிதர்களின் விருப்பு வெறுப்பு தேவையா ?சிந்திக்க வேண்டுகிறோம் . இன்று 10 கோடி பேருடன் இணைந்து போராட வில்லையானால் , நாளை தனியே போராடி மட்டும் தலைகீழாக மத்திய அரசின் கொள்கை முடிவுகளை புரட்டிப் போட்டுவிட முடியுமா ? ஒவ்வொரு துறையிலும் ஊழியர்கள் பாதிக்கப் படும் போது , ஆங்காங்கே போராடி தடுக்க முடியாத போது , தற்போது அனைத்து பகுதி ஊழியர்களும் ஒன்று திரண்டுள்ளோம் !



இன்றில்லையேல் என்றும் இல்லை !

களம் இறங்கிப் போராடுவோம் !

போராட்டத்தை முழு வெற்றியாக்குவோம் !



போராட்ட வாழ்த்துக்களுடன்

J.R. , மாநிலச் செயலர், அஞ்சல் மூன்று

Posted by All India Postal Employees Union – Group ‘C’ Tamilnadu Circle

No comments:

Post a Comment