NFPE

Friday 31 July 2015

RECEPTION COMMITTEE FOR 37TH CIRCLE CONFERENCE OF AIPEU GR. C TN FORMED !


மாநில மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்பு !

அன்புத் தோழர்களே ! தோழியர்களே !  வணக்கம் !

நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் 37 ஆவது மாநில மாநாட்டினை சிறப்பாக நடத்தும் பொருட்டு அதற்கான வரவேற்புக் குழு அமைக்கும் நிகழ்வு கடந்த 18.07.2015 அன்று மாலை புதுகை நகரில் மேனா  திருமண மண்டபத்தில் மாநிலச் சங்கத்தின் உதவித் தலைவர் தோழர். J .ஜானகிராமன் அவர்கள்(திருச்சி) தலைமையில்மாநிலச் சங்கத்தின் உதவி நிதிச் செயலர் தோழர். R . பெருமாள் (குடந்தை) அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. 

வரவேற்புக்குழு அமைக்கும் நிகழ்வில் மாநிலச் செயலர் தோழர். J.R., 
சம்மேளன செயல் தலைவர் தோழர். A . மனோகரன், AIPEU GDS மாநிலச் செயலர் தோழர். R . தனராஜ் மற்றும் மத்திய மண்டலத்தைச் சேர்ந்த அஞ்சல் மூன்று கோட்ட/ கிளைச் செயலர்கள்இதர நிர்வாகிகள் அஞ்சல் நான்கின் முன்னாள்/ இந்நாள் புதுகை கோட்டச் செயலர்கள் தோழர். பார்த்திபன்தோழர். வீரையன் தோழர். நாகராஜன் , NFPE GDS சங்க புதுகை கோட்டச் செயலர் தோழர். ஜானகிராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்பித்தார்கள். இது குறித்த முதல் நிலை வரவேற்புக் குழுவின் சுற்றறிக்கை நன்கொடை ரசீது புத்தகங்களுடன் கோட்ட/ கிளைச் செயலர்களுக்கு தற்போது கிடைத்திருக்கும். விரிவான அடுத்த சுற்றறிக்கை விரைவில் வரவேற்புக் குழுவால் அனுப்பி வைக்கப்படும். 

கூட்டத்தில் வரவேற்புக் குழுவுக்கான கீழ்க் கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 

CHAIRMAN                              :   ROTARIAN SEENU CHINNAPPA , 
                                                          PRESIDENT, CHAMBER OF COMMERCE, PDK.                             
DY. CHAIRMAN                      :   ROTARIAN SRI.  B. KUMAR, MMUNICIPAL
                                                         CONTRACTOR, PDK 

WORKING CHAIRMAN        :   COM. J. JANAKIRAMAN , CIRCLE VICE PRESIDENT.

VICE CHAIRMAN              :   COM. R. PERUMAL , ASST. CIR. FIN SECRETARY.

VICE CHAIRMAN              :   COM.N. MUTHUSAMY,EX-DIV SEC., PUDUKKOTTAI

GENERAL SECRETARY   :   COM. C.D. KUMARESAN, PUDUKKOTTAI


GENERAL CONVENER    :   COM. R. KUMAR, ACS & DIVISIONAL SECRETARY.

JOINT CONVENER             :  COM. K. NAGAJEYAM, CHAIRMAN , MAHILA 
                                                       COMMITTEE, PUDUKKOTTAI DVL. BR.

FINANCIAL SECRETARY :  COM. K.R. KANNAN, PRESIDENT, PDK DVL. BR.

ASST. FIN. SECRETARY         :   COM. M. RATHINAM, VICE PRES. PDK DVL. BR.

MEMBERS RECEPTION COMMITTEE

COM.

1. A PALANISAMY, DIVISIONAL SECRETARY, KARUR
2. R. MARUTHANAYAGAM, DIVISIONAL SECRETARY, TIRUCHIRAPPALLI
3. C. SASIKUMAR, DIVISIONAL SECRETARY, SRIRANGAM
4. S. SELVAKUMAR, DIVISIONAL SECRETARY, THANJAVUR 
5. D. R. LENIN, BRANCH SECRETARY , PAPANASAM
6. J.  SETHURAMAN, BRANCH SECRETARY, MANNARGUDI 
7.  P. SEKAR,  DIVISIONAL SECRETARY, PATTUKKOTTAI
8.  P. ANBALAGAN, BRANCH SECRETARY , TIRUTHURAIPUNDI
9. R. RAMALINGAM, BRANCH SECRETARY, TIRUVARUR
10.S. MEENAKSHISUNDARAM,DIVL SECRETARY, NAGAPPATTINAM
11.K. DURAI , DIVISIONAL SECRETARY, MAYILADUTURAI
12. N. NATARAJAN, BRANCH SECRETARY, SIRKALI
13. M. SUNDARAMURTHY, EX-DIVISIONAL SECRETARY, CUDDALORE
14. C. GANAPATHY, ADS, PUDUKKOTTAI
15. T.P. THANIKACHALAM,  ASST. DIVL. SEC., VRIDDHACHALAM 
16. C.PRABHAKARAN, DIVL. PRESIDENT,    KUMBAKONAM
17. R. PALPANDI, EX- DIVISIONAL SECRETARY,  NFPE GDS, PTK. 
18. R.VISHNUDEVAN, FINANCIAL SEC., NFPE GDS,  TN CIRLE (SRR)
19. M. ELANGOVAN, ASST. CIRCLE SEC./DS, NFPE  GDS, PATTUKKOTTAI
20. A. PARTHIBAN, EX DIVL. SEC., NFPE P4, PUDUKKOTTAI
21. K.VEERAIYAN , EX- DIVL. SEC, NFPE P4,  PUDUKKOTTAI
22. C. NAGARAJAN,  DIVL. SEC., NFPE P4, PUDUKKOTTAI
23. K. JANAKIRAMAN, DIVL. SEC.,  NFPE GDS, PUDUKKOTTAI 
24. C.VEERAPPAN,  NFPE P4 PDK
25.K.VAITHEESWARAN, FS.,  NFPE P3 DK
26. K. SAKTHIVEL, FS.,  NFPE P4 PDK
27. N. GUNASEKARAN , DIVL PRES  NFPE GDS PDK
28. R.BALACHANDRAN, FS.,  NFPE GDS PDK

கீழ்க் கண்ட துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன :-

SUB COMMITTEE:

1. FINANCIAL COMMITTEE

2. FOOD COMMITTEE

3. TRANSPORT COMMITTEE

4. ACCOMODATION COMMITTEE

5. STAGE DECORATION COMMITTEE

6. PUBLICITY COMMITTEE

7. REGISTRATION/DONATION COMMITTEE

ADVISORY BOARD

1. Com. K. V. Sridharan,  Chairman
2. Com. K. Ragavendran, Working Chairman
3. Com. J. Ramamurthy,  Working Chairman
4. Com. S. Ragupathy,  Vice chairman
5. Com. A Manoharan, Vice Chairman 
6. Com. A. Veeramani, Vice chairman
7. Com. J. Srivenkatesh, Vice Chairman
8. Com. R. Dhanaraj, Vice Chairman
9. Com. S. Veeran,  Member
10. Com. C. Sanjeevi,  Member
11.Com. R.V. Thiyagarajapandian, Member

தீர்மானங்கள் 

1. மாநிலச் சங்க முடிவினை ஏற்று எதிர்வரும் செப்டம்பர் 4,5  மற்றும் 6, 2015 தேதிகளில் புதுகை மாநகரில் அஞ்சல் மூன்றின் 37  ஆவது மாநில மாநாட்டினை சிறப்பாக நடத்துவது.

2. மாநாடு நடைபெறும் இடத்திலேயே சார்பாளர் / பார்வையாளர்  தங்குமிடத்தினை ஏற்பாடு செய்வது.

3. மாநாட்டு பொது அரங்கு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிட பல்வேறு அரசியல் , தொழிற் சங்கத்தலைவர்கள், அதிகாரிகள் , சம்மேளனத்தின் முன்னாள் / இந்நாள் பொதுச் செயலர்களை மாநாட்டுக்கு அழைப்பது.

4.மாநாட்டு சார்பாளர்கள் / பார்வையாளர்கள் கட்டணம் ரூ.1000/-  என  நிர்ணயம் செய்வது.

5. மாநாட்டை சிறப்பாக நடத்திடும் பொருட்டு நமது அஞ்சல் மூன்று உறுப்பினர்கள் அனைவரிடம் இருந்தும் குறைந்த பட்சம் ரூ. 200/- நன்கொடையாகப் பெறுவது.

6. புதுகை மற்றும் அதன் அண்டைக் கோட்டங்களில் இருந்து பெரிய அளவில் தோழர்களைக் கொண்டு மாநாட்டுப் பணிக்கான உட்குழுக்களை அமைப்பது.

7. புதுகைக்கு பெரும் பெருமையும் சேர்க்கும் பாரம்பரியம் மிக்க செட்டி நாட்டு  உணவு வகைகளை சிறப்பான அளவில்  வல்லுனர்களைக் கொண்டு அமைப்பது.

மாநாடு சிறக்க உங்களின் முழு ஒத்துழைப்பினையும் , அன்பான ஆதரவினையும்  மாநிலச் சங்கம் அன்போடு வேண்டுகிறது !

மாநாட்டு வாழ்த்துக்களுடன் 

 ஜெ . இராமமூர்த்தி,
மாநிலச் செயலர், அஞ்சல் மூன்று ,
தமிழ் மாநிலம் .

No comments:

Post a Comment