NFPE

Friday 27 May 2016

WHEN INACCESSIBILITY IN 'FINACLE' EXPERIENCED, BUSINESS CHEATING PLAN (BCP) INTRODUCED BY THE DEPARTMENT TO HARASS THE LABOUR


BUSINESS  CONTINUITY PLAN   OR
BUSINESS  CHEATING  PLAN ?

 "  இன்போசிசே வெளியேறு " 

ஊழியர்  பணியில் குறைவு  ஏற்படின் இப்போதெல்லாம் WARNING கடிதம் கூட  எந்த அதிகாரியும்  கொடுப்பதில்லை ! உடனே  குறைந்த பட்சம் விதி 16 இன் கீழ்  தண்டனை தான் ! 

"அதுவும் திருப்தி இல்லை " என்று  மேல் முறையீட்டு அதிகாரிகள்  REVIEW  செய்து  விதி -14 ஏன்  பிரயோகப்  படுத்தக்கூடாது  என்று  உடனே  நோட்டீஸ்  அளிக்கும்  கொடுமை தினம் தினம்  நாம்  பார்க்கிறோம் !.

 கேட்டால் சேவைக் குறைவை அரசாங்கமே விரும்புவதில்லை  என்ற பதில் !  உண்மையோ  உண்மைதான் ! 

ஆனால்  1100  கோடிகள்  பெற்ற  INFOSYS  நிறுவனத்தின்  கையாலாகாத தனத்திற்கும்   ஆண்டுக்கணக்கில்  தொடரும்  சேவைக் குறைவிற்கும்   எந்த தண்டனையும்  தரவேண்டும் என்று எந்த அதிகாரியும் பேசுவது கூட இல்லை ! மாறாக  சிவப்புக்கம்பள  வரவேற்புதான் ! தினம் தினம்  VIDEO  CONFERENCING  தான் ! 

செயல்படாத FINACLE  , MC  CAMISH  குறித்து செயல்பட  வைக்க  முடிவுகள் எடுக்காமல் , ஊழியர்களை மேலும் வதைத்திட  BUSINESS  CHEATING  PLAN  ( SORRY ) BUSINESS  CONTINUITY PLAN  தான் ! 

செயல்படாத சேவையை  நாட்டிலேயே முதன் முதலில்  நாம்தான்  செய்து முடித்தோம் என்று  பதக்கம் வேறு  நமக்கு  நாமே  குத்திக் கொள்கிறோம் ! நம்  கண்களை  நாமே   குருடாக்கிக் கொள்கிறோம் ! 

இந்தக்  கொடுமைகள் தீர  வேறு வழியில்லை ! இனி  பொதுமக்கள் முன்னர் பிரச்சினையை  எடுத்துச் செல்ல வேண்டியதுதான் !
 காந்தியடிகள் ! 

இன்று இலாக்காவையும் பொதுமக்கள் சேவையையும்  காத்திட
" இன்போசிசே வெளியேறு  " இயக்கம் அறிவிப்போம் நாம்   ! 

அகில இந்திய அளவிலான  இயக்கம் மற்றும் வேலை  நிறுத்தத்தை நடத்திட  நம் அகில இந்திய சங்கத்தை  மாநிலச்  சங்கம் கோரியுள்ளது ! விரைவில் அதனை நாம் எதிர்பார்க்கிறோம் !  

பிரச்சினையில் முன்னேற்றம் ஏற்படவில்லையெனில் தமிழகம் தழுவிய அளவில் தமிழக அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பில்  "இன்போசிசே வெளியேறு "  பிரச்சார  இயக்கம் நடத்திடப்படும் ! 

பிரச்சினையின் முழு வடிவமும்  பொதுமக்கள் மற்றும்   
ஊடகங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் !  

சட்ட மன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம்  மக்கள் சபைகளில்  பிரச்சினை  தீவிரமாக கொண்டு செல்லப்படும் ! 

பொங்கி  எழுவோம்  !   புயலாக  மாறுவோம் !




No comments:

Post a Comment