NFPE

Wednesday, 16 November 2016

DEVELOPMENTS ON THE CIRCLE WORKING COMMITTEE GOING ON 15TH & 16TH NOV.16 & DECISIONS OF THE DIVL/ BRANCH SECRETARIES MEETING OF CENTRAL REGION HELD ON 14.11.2016


முன்கை எடுப்பதே தமிழ் மாநில  சங்கம் !தமிழ் மாநில COC ! 
ஒன்று பட்ட இயக்கமாக  JCA  அமைத்து போராட்டங்களை வகுப்பதும் தொழிலாளர் சக்திகளை ஊழியர் பிரச்சினையில் ஒன்று படுத்துவதும்  
பிரச்சினைகளுக்கு  தீர்வு காண்பதும் தமிழ் மாநிலமே !.

மேலே இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேள்வி கேட்டு 
கை  காட்டி முடங்கிக்  கிடப்பதல்ல நாம்  !

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு பகுதி வாரிப் பிரச்சினைகளுக்காக 
அனைத்திந்திய பிரச்சினைகளையும் உள்ளடக்கி 
26.3.2015 ல் தமிழக  வேலை நிறுத்தம் !

அகில இந்திய பிரச்சினைகளில் ----

CBS/CIS பிரச்சினைகளில் முன்கைப் போராட்டம் !
OUTSOURCED POSTAL AGENCY  பிரச்சினையில்  முன்கைப் போராட்டம் !
SUNDAY/HOLIDAY DUTY ETAIL DELY பிரச்சினையில் முன்கைப் போராட்டம் !
GDS  உயர்த்தப்பட்ட போனஸ் மறுக்கப்பட்ட பிரச்சினையில் 
முன்கைப் போராட்டம் !
CASUAL ஊழியர்கள் பிரச்சினைகளில் முன்கைப் போராட்டம் ! 

இப்படி ஊழியர் பிரச்சினைகளில் வாதாடி, போராடி தீர்வு காண்பதே  நாம்! அறிவிக்கப்படும் போராட்டங்களை நடத்தாமல் இருப்பதல்ல நாம் !

அன்புத் தோழர்களுக்கு வணக்கம்.

14.11.2016 அன்று புதுக்கோட்டையில் அஞ்சல் மூன்று தமிழ் மாநிலச் சங்கத்தினால் கூட்டப்பட்ட  மத்திய மண்டல அஞ்சல் மூன்று  கோட்ட /கிளை செயலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் மத்திய மண்டலத்தில் கோட்ட  நிர்வாகத்தில் எடுக்கப்படும் தீர்க்கப்படாமல் இருக்கும் ஊழியர்கள் பிரச்சினைகள் குறித்தும் அதிகாரிகளின் அத்து மீறல்கள் குறித்தும் ஆழமாக விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.

மேலும் புதுக்கோட்டையில்  நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் மாநிலச் செயற்குழு கூட்டப்பட்டு அதில் பல்வேறு பட்ட ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதித்து தற்போது பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இவை குறித்த அனைத்து விபரங்களும் உடனடியாக தலைமையகம் திரும்ப வேண்டியுள்ளதால்  தற்போதே வெளியிட இயலாது. 

எனினும் தற்போதைய ரூ. 500/- மற்றும் ரூ. 1000/- WOS ரூபாய் நோட்டுக்கள் மாற்றுதல்  மற்றும் கணக்குகளில் டெபாசிட் செய்தல் குறித்து  மத்திய அரசின் முடிவினாலும் , இது  குறித்து  துறை அமைச்சரின் உத்திரவினாலும் ,  தொடர்ந்த இலாக்கா உத்திரவுகளாலும்  தினசரி  பல்வேறு பிரச்சினைகள் ஊழியர்களுக்கு எழுந்த வண்ணம் உள்ளன . 

மேலும்  ஞாயிறு , விடுமுறை தினங்களில் அனைத்து பகுதி ஊழியர்களும் பணிக்கு வர  உத்திரவிடப்படுகிறார்கள். அது போல இரவு 08.00 மணிவரை COUNTER பணியும் அதன்பின்னர் இரவு 11.00 மணிவரை CASH  CONVEYANCE , SUB A /CS, TREASURY என பல்வேறாக பணி   செய்திட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் . இதற்கு உரிய POLICE பாதுகாப்பு அளிப்பதில்லை. பல கோடிக்கணக்கான பண வைப்புக்கு எந்தவித பாதுகாப்பும் செய்வதில்லை. எழுத்தர்கள், தபால்காரர்கள், MTS , GDS , RMS என்று எல்லா  பகுதிகளிலும் பாதிப்பு !

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் , துன்பத்திற்கு உள்ளாகி இருக்கும் ஊழியர்களை நிர்ப்பந்தித்து நம் துறை அதிகாரிகள் புதிய சேமிப்பு வங்கி கணக்குகள் துவக்கினால் மட்டுமே  பழைய நோட்டுகள் மாற்றப்படும் அல்லது டெபாசிட் செய்யப்பட்டு  WITHDRAWAL அளிக்கப்படும் என்று ஊழியர்களை குதிரை ஓட்டி  செயல்படாத  கணக்குகள் பிடிக்கச் சொல்கிற கொடுமை  இந்த இலாக்கா தவிர  வேறு எங்கும் நடைபெற வில்லை.

மேலும் போலி நோட்டுகளை கண்டறியும் கருவி அனைத்து அலுவலகங் களுக்கும்  உடனடியாக அளிப்பதாக CPMG  அவர்கள் நம் மாநிலச் செயலரிடம் உறுதி அளித்து இரண்டு நாட்கள் கடந்த பின்னரும் , பல கோட்டங்களில் குட்டி அதிகாரிகள் LPC போடுகிறேன் என்றும் COMPETING ESTIMATE  வாங்குகிறேன் என்றும்  FUND இல்லையென்றும் இழுத்தடிக்கும் கொடுமைகள் நடைபெற்று வருகின்றன. 

கோடிக்கணக்கில் வரும் பணத்தில் ஒன்று அல்லது இரண்டு கள்ள நோட்டுக்கள் வங்கிகளால் நிராகரிக்கப்பட்டால் அவற்றை ஊழியர்கள் தலையில் கட்டி  அந்த வேதனையில் அகமகிழ்வது என்று  குட்டி அதிகாரிகள் பலர் கொட்டமடிக்கின்றனர்.

ஞாயிறு , விடுமுறை தினங்கள் மேலும் 08.00 மணிவரை பணி  நீடிப்பு என்பதை நாம் எதிர்த்த போதிலும் இதுவரை பணியாற்றிய நாட்களுக்கு கூட எந்தவித பணப்பயனும் அளிக்கவில்லை. பல கோட்டங்களில் இவ்வாறு பணியாற்றிய ஊழியர்களுக்கு  குறைந்த பட்சம் TEA , COFFEE வாங்கிக்கொள்ளக்கூட அனுமதி அளிக்கவில்லை. ஆனால் பல கோட்டங்களில் ஆயிரக்கணக்கில் செலவு செய்ததாக 'பாக்கெட்' செய்யப்பட்டதாக நமக்கு புகார்கள் வந்துகொண்டு உள்ளன.  S .O . க்களில் பணியாற்றிய ஊழியர்களுக்கோ கேட்கவே நாதி இல்லை என்ற நிலைமை .

மேலும் ஏற்கனவே முஹரம்  பண்டிகை தொடங்கி இது நாள்வரை, தொடர்ந்து ஞாயிறு  மற்றும் விடுமுறை தினங்களில்  ETAIL /ECOMMERCE /SPEED பட்டுவாடாவுக்கு ஊழியர்களை பணிக்கு நிர்ப்பந்தித்தல்  தொடர்கதையாகி ஊழியர்கள் கொத்தடிமை ஆக்கப்பட்டுள்ளார்கள்.

எனவே இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட  உடனடியாக கீழே காணும் இரண்டு கட்ட போராட்டம் நடத்திடுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

1. எதிர்வரும் 18.11.2016 வெள்ளியன்று மாநிலம் தழுவிய அளவில் கருப்பு வண்ண கோரிக்கை அட்டை அணிந்து  அனைத்து  கோட்ட  நிர்வாக அலுவலகங்கள் முன்பாக  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.

2.அதே நாளில்  மாநிலத்  தலைமையகமான சென்னையில் CPMG அலுவலகம் முன்பாக சென்னை பெருநகரத்தின்  கோட்ட /கிளைகளை உள்ளடக்கி மாபெரும் ஆர்ப்பாட்டம்  நடத்துதல் . அன்றைய தினத்தில் CPMG அவர்களிடம் அனைத்து பகுதி கோரிக்கைகளையும் உள்ளடக்கி  கோரிக்கை மனு அளித்தல்.

3.இதன் அடிப்படையில் பிரச்சினை தீர்க்கப்படவில்லையானால் எதிர்வரும் 27.11.2016 ஞாயிறு  அன்று  தமிழகம் முழுதும் பணி  மறுப்புப் போராட்டம்  நடத்துவது.

4. மேலும் NFPE  COC  மற்றும்  FNPO COC  யை அணுகி ஒன்று பட்ட போராட்ட அறைகூவலுக்கு வழி வகுப்பது. அடுத்த கட்டமாக கூடுமானவரை JCA  அல்லது NFPE  COC ஐ  அணுகி  கோரிக்கைகளை ஒன்று படுத்தி  சட்ட பூர்வமான நோட்டீஸ் அளித்து ஒரு வேலை நிறுத்தத்தை அறிவிப்பது  என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான தொலைபேசி மூலமான தொடர்புகளை மேற்கொண்டு FNPO COC மற்றும் NFPE  COC  பொறுப்பாளர்களை அணுகி  பேசி வருகிறோம். ஒன்று பட்ட போராட்டத்திற்கு நாம் வழி வகுப்போம்.

மேலும்  நம்முடைய சம்மேளன மா பொதுச் செயலர் தோழர். பராசரிடம் அனைத்து பிரச்சினைகளும் தொலைபேசி மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அவரிடமும் இது குறித்து இலாக்கா செயலரிடம் பேசிட கூறியுள்ளோம். பேசியும் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்றால் அகில இந்திய  அளவில் போராட்ட அறைகூவலையும் வேண்டியுள்ளோம்.

நம்முடைய CHIEF  அவர்களுக்கும்  உடனடியாக  பிரச்சினையில் தலையிட்டு அவரளவில் முடிந்த உடனடி  தீர்வு காண  SMS மூலம் புதுக்கோட்டையில் இருந்து  கோரிக்கை அனுப்பியுள்ளோம்.

அதன்  நகல் கீழே உங்கள் பார்வைக்கு :-

RESPECTED SIR,

SITUATION IS WORSENING DAY BY DAY. SO MANY ISSUES CROPPED UP. NO MONETARY COMPENSATION FOR SUNDAY/HOLIDAY/'EXTENDED DUTY. EVEN YOUR ASSURANCE ON FAKE NOTE DETECTOR IS NOT CARRIED OUT TILL TIME MOSTLY BY ALL. MANY OFFICERS ARE OBSERVING FORMALITIES IN FORMING LPC AND DELAYING BADLY. BUT WORKER CANNOT POSTPONE ANYTHING. RESULTING IN SLAPPING FURTHER PENALTY ON POOR WORKER ON LOSS IN FAKE NOTES. CPMG IS ALSO NOT MEETING STAFF UNIONS ON SUCH STATE OF EMERGENCY. WE HAVE PRESENTED EVERY THING BEFORE YOU. WE HAVE NO OTHER GO  EXCEPT TO STOP WORK, WHICH WILL BE DECIDED IN CWC AND ANNOUNCED SHORTLY= CIRCLE SECRETARY, NFPE P3 TN.

JCA முடிவு  எட்டியவுடன்  உடன் ஒன்று பட்ட போராட்டம் உறுதி செய்யப்படும். அதன் அடிப்படையில் வலைத்தளத்தில் தெரிவிக்கப்படும் அறிவிப்புகளை உடன் அனைத்து பகுதி  JCA  தோழர்களுக்கும்  கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஒன்று பட்ட போராட்டம் !                                  ஒன்றே நமது துயரோட்டும் !
ஒன்று படுவோம் !                                                                     போராடுவோம் !
போராடுவோம் !                                                                வெற்றி பெறுவோம் !

No comments:

Post a Comment