NFPE

Tuesday 9 October 2012

SOUTH ZONE STUDY CAMP - CHENNAI- 13.10, 14.10.2012

NFPE  சம்மேளனம் நடத்தும்  தென் பிராந்திய  தொழிற்சங்க  பயிலரங்கு  எதிர் வரும் 13 மற்றும் 14.10.2012 தேதிகளில் சென்னை தியாகராய நகரில் உள்ள அலமேலு மங்கா திருமண மண்டபத்தில்  சிறப்பாக நடைபெறவுள்ளது. இதில் தமிழக அஞ்சல் மூன்று சார்பாக 20 சார்பாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.  

ஆனால்  இரண்டாம் நாள்  மதியம் 2.00 மணி தொடங்கி நடைபெற உள்ள நிகழ்ச்சி,  பொது அரங்கு நிகழ்ச்சியாக  நடைபெற உள்ளது . எனவே அனைத்து பகுதி தோழிய/தோழர்களும், குறிப்பாக சென்னை  பெருநகர மண்டலத்தில் உள்ள அனைத்து கிளைகளில் இருந்தும்  பெருவாரியான  தோழர்கள்  கலந்து கொண்டு  நிகழ்ச்சியை சிறப்பிக்க  வேண்டுகிறோம்  இந்த நிகழ்ச்சியில்  நமது சம்மேளனத்தின்  அனைத்து உறுப்பு சங்கங்களின் பொதுச் செயலர்களும்  கலந்து கொண்டு  உரையாற்ற உள்ளார்கள் என்பது , நமக்குக் கிடைக்காத  ஓர் அரிய  வாய்ப்பு .  இதனை கோட்ட/ கிளைச் செயலர்கள் கவனத்தில் கொண்டு  உடன்  இந்த செய்தியை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டுகிறோம். 

இவண் 
தோழர். M. கிருஷ்ணன் , மா பொதுச் செயலர் ,NFPE,  புது டெல்லி - SMS வாயிலாக . 




No comments:

Post a Comment