அன்புத் தோழர்களுக்கு, வணக்கம்.
கடந்த 2.8.2017 அன்று புது டெல்லியில் நடை பெற்ற கேடர் சீரமைப்பு குறித்து பரிசீலிக்க அமைக்கப் பட்ட கமிட்டியின் கூட்டத்தில் ஊழியர் தரப்பில், நம்முடைய அகில இந்திய சங்கத்தின் சார்பில் நாம் கலந்து கொண்டதும் அதில் சரியான முடிவுகள் எடுக்கப்படாததும் உங்களுக்குத் தெரிவித்தி ருந்தோம்.
தற்போது எதிர் வரும் 1.9.2017 அன்று அந்த கமிட்டியின் அதிகாரிகள் குழு இறுதி முடிவுகள் எடுக்க புது டெல்லியில் கூட உள்ள நிலையில் நம்முடைய கருத்துக்களை மீண்டும் எடுத்துரைக்க முடிவெடுத்து இன்று நம்முடைய தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பில் இந்தக் கமிட்டியின் உறுப்பினரும் நம்முடைய PMG, MM& BD யாக இருக்கின்ற திரு.J.T. வெங்கடேஸ்வரலு அவர்களை சந்தித்து நம்முடைய கோரிக்கை மனுவினைக் கொடுத்து பேசினோம். அதன்மீது அவர் அளித்த பதில் .
1. கமிட்டியின் பரிந்துரை என்பது கிட்டத்தட்ட ஏற்கனவே தயாரிக்கப்பட்ட நிலையில் உள்ளது.
2. இதில் ஏற்கனவே அனைத்து காசாளர் பதவியும் அடிப்படை விதிகளின்படி எழுத்தருக்கானது என்று பரிந்துரைக்கப்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் மட்டும் அனைத்து காசாளர் பதவிகளும் LSG யாக IDENTIFY செய்யப்பட்டுள்ளன.
4. இப்படியாக மொத்தம் 694 காசாளர் பதவிகள் LSG யாக அடையாளம் காணப்பட்டு அவற்றில் பெரும்பகுதி எண்ணிக்கையில் தமிழகத்தில் நிரப்பப்பட்டுள்ளன.
5. ஏற்கனவே இரண்டாவது பட்டியலில் உள்ள ஊழியர்களுக்கு பெருநகர கோட்டங்களில் இடம் இல்லாத காரணத்தால் DECLINE செய்த பதவிகள் உள்ளிட்ட கிட்டத்தட்ட 1200 பதவிகள் வெளிக் கோட்டங்களில் நிரப்ப வேண்டியுள்ளது.
6. இந்த நிலையில், TREASURY மாற்றப்பட்டால் மேலும் 694 ஊழியர்களும் பாதிப்புக்குள்ளாகும் சூழல் உள்ளது என்பதை நம்முடைய மாநிலச் சங்கத்தின் சார்பில் சுட்டிக் காட்டியதன் பேரில் தமிழகத்திற்கு மட்டும் இதில் விலக்கு அளிக்க பரிந்துரைப்பதாக கமிட்டியில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
7. இது தவிர ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட விஷயங்களில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதில் பல விஷயங்களில் நமக்கு உடன்பாடில்லை என்பதை சுட்டிக் காட்டியதால், இது குறித்த கோரிக்கை மனுவினை நமது பொதுச் செயலர் மூலம் கமிட்டியின் CHAIRMAN அவர்களுக்கு அளிக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
இதன்படியே தலைவர்கள் KVS மற்றும் M.கிருஷ்ணன் அவர்களின் வழி காட்டுதலின்படி நம்முடைய மாதிரி கோரிக்கை மனு தயாரிக்கப்பட்டு நம்முடைய பொதுச் செயலர் தோழர். பராசர் அவர்களின் பார்வைக்கும் அவர்களின் ஒப்புதலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அவரும் இதன் மீது தன்னுடைய முடிவுகளை எடுத்து கமிட்டி தலைவருக்கும் நம்முடைய இலாக்கா முதல்வருக்கும் அனுப்புவதாக உறுதி அளித்துள்ளார்கள்.
மேலும் இதன் மீது நேரில் பேசி தமிழக அஞ்சல் மூன்றின் கோரிக்கை மனுவினை அளித்திடுமாறு நம்முடைய கர்நாடகா அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர். ஜானகிராம் அவர்களிடம் தொலைபேசியில் பேசி அவர்களுக்கும் நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் மனுவின் நகலை அனுப்பியுள்ளோம். அதனை நாளை காலை அவர் நேரிடையாக கர்நாடகா CPMG யும் கமிட்டியின் தலைவருமான திரு. சார்லஸ் லோபோ அவர்களிடம் அளித்துப் பேச உள்ளார். மேலும்
திரு . லோபோ அவர்களுக்கும் நம்முடைய மனு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு அவரது உதவியாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு . லோபோ அவர்களுக்கும் நம்முடைய மனு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு அவரது உதவியாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதர செய்திகள் :
1. தமிழகத்தில் கேடர் சீரமைப்பு திட்ட அமலாக்கத்தால் குறைக்கப்பட்ட 3358 எழுத்தர் பதவிகளின் காரணமாக (FEEDER CADRE) எழுத்தரில் காலிப் பணியிடங்கள் இல்லை என முடிவெடுக்கப்பட்டது. இதனால்
அ) 2016-17 மற்றும் 2017-18 க்கான எழுத்தர் தேர்வுகள்அறிவிக்கை செய்யப்படவில்லை
ஆ) அனைத்து விதி 38 இடமாறுதல்களும் நிறுத்தப்பட்டது.
ஆனால் நம்முடைய 23.8.2017 வேலை நிறுத்தம் காரணமாக தற்போது காலிப்பணியிடங்கள் கணக்கிடப்பட்டு 2016-17 மற்றும் 2017-18 க்கான அறிவிக்கை வெளியிட இலாக்கா உத்திரவிட்டுள்ளது.
இந்தக் காலியிடங்கள் என்பது சென்னை பெருநகரத்தில் மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, அண்ணா சாலை போன்ற ஒரு சில கோட்டங்களிலும் இதர மண்டலங்களில் ஒரு சில கோட்டங்களில் மட்டுமே இருப்பதாக அறிக்கை கிடைத்துள்ளது.
ஒட்டு மொத்தமாக இரண்டு ஆண்டுகள் கணக்கில் மிகக் குறைந்த அளவிலேயே இந்தக் காலியிடங்கள் உள்ளன. இதர கோட்டங்களில் எழுத்தரில் உபரி காட்டப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே 2015-16 க்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட எழுத்தர்களில் பல கோட்டங்களில் பணி நியமனம் அளிக்க முடியாத நிலையும், தேர்வு பெற்ற எழுத்தர்களில் பெரும் பகுதியினருக்கு அவர்கள் கேட்காமலேயே சென்னை பெருநகரத்தில் பணி நியமனமும் கிடைக்க உள்ளது.
மேலும் நம்முடைய தொடர்ந்த அழுத்தம் காரணமாக ஏற்கனவே உத்திரவிடப்பட்டு நிலுவையில் இருந்த அனைத்து விதி 38 இட மாறுதல்களும் உடனே அமல் படுத்திட கடந்த வாரம் உத்திரவு வெளியிடப்பட்டது . அதன்படி 150 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தற்போது இடமாற்றம் பெறுகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை பெரு நகரத்தில் அதிகம் பயனடையும் கோட்டம் சென்னை மத்திய கோட்டமாக இருக்கும். விதி 38 மற்றும் புதிய பணி நியமனத்தில் கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட எழுத்தர்களை இந்தகோட்டம் பெற உள்ளது.
ஆனால் இரண்டாவது கட்ட கேடர் சீரமைப்பு உத்திரவு தற்போதுள்ள நிலையில் இடப்பட்டால், சென்னை பெரு நகர கோட்டங்களில் எழுத்தர்கள் SANCTIONED STRENGTH ஐ தாண்டி உபரி என அறிவிக்கப்பட்டு மீண்டும் அவர்களை இடமாற்றம் செய்திட நேரும் என்பதையும் நாம் நம்முடைய கோரிக்கை மனுவில் சுட்டிக் கட்டியுள்ளோம் என்பதனையும் இந்த இடத்தில் உங்களுக்கு நினைவூட்டுகிறோம்.
ஒரு புறம் உயர் தொழில் நுட்பம் புகுத்தப்படும் சூழலில், மறுபுறம் ஆழிப் பேரலையாக இந்த ஆட்பற்றாக்குறை என்பது அதிகம் இருந்தும், நிரப்பிட இயலாத செயற்கையான சூழலாக நம்மை தாக்க உள்ளது என்பதும் இதனை எதிர்த்து நாம் பெரும் போராட்டத்திற்கு தயாராக வேண்டியது என்பதும் மிகப் பெரும் உண்மையே.
இதனை முன் கூட்டியே அறிந்து முதலில் அறிவிக்கும் மாநிலச் சங்கமும், அதிகார மட்டத்திற்கும் அகில இந்திய சங்கத்திற்கும் எடுத்துச் செல்லும் முதல் மாநிலச் சங்கமும் நம்முடைய தமிழ் மாநில அஞ்சல் மூன்று மாநிலச் சங்கமே.
விடை கிடைக்குமா ? வீதி இறங்கிப் போராட்டமா ? ஒரு மாதத்தில் தெரியவரும். நம்முடைய கோரிக்கை மனு கீழே உங்களின் பார்வைக்கு அளிக்கப்பட்டுள்ளது.