NFPE

Tuesday, 22 August 2017

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற கருத்தையும் சொல்லிக்கொடு!!

போராட்டத்தில் கலந்து கொள்ளாத என் நண்பனே!  தோழியே!
நாளை நீ அதிகாலையே அலுவலகம் செல்வாய்! என்றுமில்லாமல் சற்று முன்னதாகவே சென்று உன் விசுவாசத்தை நிரூபிப்பாய்! 
🕺அனைத்து வேலைகளையும் நீ ஒருவனாகவே கவனிப்பாய்!
ஏதாவது செய்வாய்!.
 பரவாயில்லை!
  உனக்காகவே நான் வீதியில் நிற்கிறேன்!
கையை உயர்த்தி உனக்காகவும் கோசம் போடுகிறேன்!
🗣என் குரலின் சத்தம்
அரசின் செவியை எட்ட, உனக்கும் சேர்த்தே சத்தமாய் ஒலி எழுப்புவேன்!!
நீ வரவில்லை என எனக்கு வருத்தமில்லை பரவாயில்லை!!

நீ! தவறாமல் ஒரு நீதிக் கதையை சொல்லி விடு!.
ஒற்றுமையை உணர்த்தும் புறாக்களும்,வேடனும்- சிங்கமும் எருமையும் கதைதான் அது!
🌹ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற கருத்தையும் சொல்லிக்கொடு!!
🌹கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்ற ஒற்றுமை எண்ணத்தையும் சொல்லிக்கொடு!!
வருங்கால தலைமுறையாவது  ஒற்றுமை எண்ணத்தோடு வாழட்டும்!

No comments:

Post a Comment