NFPE

Sunday 13 August 2017

'VENTURE' - புதிய நூல் வெளியீடு

ஆகஸ்ட் திங்கள்- 2017, 6 முதல் 9 தேதிவரை பெங்களூருவில் நடைபெற்ற NFPE அஞ்சல் மூன்று சங்கத்தின் 31 வது  அகில இந்திய மாநாட்டில், முதல் நாள் நிகழ்வில் நம்முடைய  அன்புத் தலைவர் 'அறிவு ஜீவி' KVS அவர்களால் தொகுக்கப்பட்டு அஞ்சல் துறையின் செயலர் திரு. நந்தா அவர்களால் வெளியிடப்பட்ட நூல் 'VENTURE' ஆகும். இந்த நூல் நம் அகில இந்திய சங்கத்தின் சார்பில் வெளியிடப் பட்டுள்ளது.

இது 2013ம் ஆண்டுப் பதிப்புக்குப் பிறகு இதுநாள் வரை உள்ள விதி மாற்றங்கள், சட்ட விதி திருத்தங்கள், இது நாள் வரையிலான DOPT உத்திரவுகள், இலாக்கா உத்திரவுகள் என அனைத்து பகுதிகளும் அடங்கிய,  திருத்தப்பட்ட பதிப்பு ஆகும். 

இது இரண்டு பாகங்கள் அடங்கியது. முதல் பாகம் 612 பக்கங்களும் இரண்டாம் பாகம் 700 பக்கங்களும் அடங்கிய மத்திய அரசு மற்றும் அஞ்சல் துறை ஊழியர் களுக்கான Encyclopedia ஆகும். தலைவர் KVS அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் தயார் செய்யப்பட்ட நூல் ஆகும். மகா சம்மேளன மாபொதுச் செயலர் தோழர். M. கிருஷ்ணன் மற்றும் சம்மேளன மாபொதுச் செயலர் தோழர். R.N. பராசர் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று  நம்முடைய அஞ்சல் மூன்று அகில இந்திய சங்கத்தின் சொத்தாக இதனை KVS அவர்கள் அளித்துள்ளார்கள். 

இலாக்கா முதல்வர் திரு. நந்தா அவர்கள் நூலை  வெளியிட,  CITU வின் அகில இந்தியப் பொதுச் செயலரும் ராஜ்ய சபா உறுப்பினருமான  தோழர். தபன் சென், வரவேற்புக்குழுவின் தலைவரும் கர்நாடக மாநில தொழிலதிபருமான திரு. ஶ்ரீதர் ரெட்டி, மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன மா பொதுச் செயலர் தோழர். M. கிருஷ்ணன், கர்நாடக மாநில CPMG Dr. சார்லஸ் லோபோ, சம்மேளன மாபொதுச் செயலர் தோழர் R.N. பராசர், அஞ்சல் மூன்றின் அகில இந்தியத் தலைவர் தோழர். J.R., வரவேற்புக் குழுவின் செயல் தலைவர் தோழர். சந்திரசேகர் ஆகியோர்,  தலைவர்  KVS அவர்கள்  முன்னிலையில் நூலைப் பெற்றுக் கொண்டார்கள்.

மாநாட்டின் ஒரு பகுதியாக, இந்த நூல் வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப் படங்களை கீழே காணலாம்.


No comments:

Post a Comment