NFPE

Thursday, 10 August 2017

6, 7, 8 மற்றும் 09.08.2017 தேதிகளில் பெங்களூரு Freedom Park ல் நடைபெற்ற NFPE அஞ்சல் மூன்று அகில இந்திய மாநாடு

  கடந்த 6, 7, 8 மற்றும் 09.08.2017 தேதிகளில் பெங்களூரு Freedom Park ல் நடைபெற்ற NFPE அஞ்சல் மூன்று அகில இந்திய மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.  அகில இந்தியத் தலைவர்களின் உரைகள் மிகச் சிறப்பாக இடம்பெற்றன.  நமது முன்னாள் பொதுச்செயலர் தலைவர் KVS அவர்கள் சுமார் 90 நிமிடங்களுக்கும் அதிகமாக அனைத்து பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்தது மிகச் சிறப்பாக இருந்தது.

  நமது மாநிலச் செயலரும், அகில இந்தியத் தலைவருமான தோழர் JR அவர்கள் அரங்கை நடத்தியவிதம் மிக அருமையாக இருந்தது.  வரவேற்பு கமிட்டியின் அரங்க அமைப்பிலிருந்து, தங்கும் வசதி செய்து கொடுத்ததில் இருந்து, விருந்தோம்பல் வரை நமது சங்க வரலாற்றில் இது போல இல்லை, இனி இயலுமா? என்ற அளவிற்கு மிகச் சிறப்பாக அகில இந்திய மாநாட்டை நடத்தினர்.  அவர்களுக்கும் திருவரங்கக் கோட்டத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

  நமது கோட்டத்தில் இருந்து 10 தோழர்கள்  அகில இந்திய மாநாட்டில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

  6, 7, 8 மற்றும் 9.8.17 தேதிகளில் பெங்களூரு Freedom Park ல் நடைபெற்ற NFPE அஞ்சல் மூன்று அகில இந்திய மாநாட்டில் தமிழகத்தில் இருந்து நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் JR, தோழர். A. வீரமணி, தோழர். ரகுபதி, மற்றும் அகில இந்திய மகிளா கமிட்டியின்  உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழியர். ஏஞ்சல் சத்தியநாதன்  (வட கோட்டம்), தோழியர். மணிமேகலை, (அண்ணாசாலை), தோழியர். வளர்மதி, (கோவை) ஆகியோருக்கும் திருவரங்கக் கோட்டத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.






NFPE, Srirangam

No comments:

Post a Comment