NFPE

Tuesday, 22 August 2017

வேலைநிறுத்தம் வெல்லட்டும் !!!


வேலைநிறுத்தம் ஒரு
வேடிக்கை பொருளல்ல --
வேர்வைகளின் வேதி பொருட்கள்
வேர்களின் பாதம் தொட்டு
வெடித்து கிளம்பும் புரட்சி பூ -இதை
தடுக்கவோ --ஒடுக்கவோ
யாராலும் முடியாது
ஒரு வகையில் வேலைநிறுத்தம்
காதல் மாதிரி --இதை
தடுக்க தடுக்கத்தான்
பேராற்றல் வெளிப்படும்
பொதுவாக நம்மில் பலரால் 
போராட்டம் ஏற்றுக்கொள்ளப்படும்
ஒருசிலரால்மட்டுமே   தூற்றப்படும்
விமர்சனங்களை தாண்டி
வீரியம் பெறும்   விரும்பி ஏற்றால்
வியக்கும் அளவிற்கு விடை கொடுக்கும் .
மண்ணில் இருந்து வெளிக்கிளம்பும்
விதையும் போராட்டத்தால் தான்
மனதில் கொண்ட எண்ணங்கள்
செயலாகுவதும் போராட்டத்தால் தான்
பெற்ற சலுகைகள் எல்லாம் -
விற்று பிழைக்கவா நாம் பிறந்தோம் ?
போராட்டத்தால் --உன் 
உரிமை உயிர்பெறும் 
உணர்வு  உருப்பெறும் 
உள்ளம் உயர்வுறும் -
உண்மை உலாவரும் 
போராட்டத்தை கண்டு ஆட்சியர் 
முகம் சுளிப்பர் --
போராளியை பார்த்து உள்ளுக்குள் 
மனம் குளிர்வர் 
அண்ணா சொன்ன வார்த்தை நினைவுக்கு வருகிறது 
இரண்டு கால்கள் உள்ளவர்கள் 
எல்லாராலும் நடக்க முடியும் 
இரண்டு கைகள் உள்ள எல்லாராலும் 
எழுத முடியாது -அதே போல் 
இரண்டு பேர் இருந்தாலும் சங்கம் அமைக்கலாம் 
சங்கம் வைத்த எல்லாராலும் தனித்து போராட முடியாது 
போராட பிறந்தவர்கள் நாம் -
போராட தெரிந்தவர்கள் நாம் 
போராட்டத்தை அறிந்தவர்கள் நாம் 
போராட்டத்தால் மட்டுமே மிளிர்ந்தவர்கள் நாம் 
வா !தோழா! வென்று வா தோழா !

 தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர்  நெல்லை 

No comments:

Post a Comment