NFPE

Sunday 9 December 2012


09.12.2012 அன்று திருவரங்கம் தலைமை தபால் அலுவலகத்தில் மாலை சுமார் 4.00 மணியளவில் அனைத்து உறுப்பினர் கூட்டம் உதவித்தலைவர் தோழர் K. கதிர்வேல் அவர்களின் தலைமையில் தொடங்கியது.  நிதிச்செயலர் தோழர் V. ஸ்ரீதரன் வரவேற்ப்புரை ஆற்ற கோட்டச்செயலர் தோழர் T. தமிழ்ச்செல்வன்,  12.12.12 அன்று நடைபெற உள்ள வேலை நிறுத்ததைப்பற்றி நீண்டதொரு விளக்க உரையாற்றினார்.  அனைத்து தோழர்களும், தோழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்குகொள்வது என அனைத்து உறுப்பினர் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அதன்பின் கோட்டத்தலைவர் தோழர் M. திருசங்கு அவர்கள் கடந்த 30.11.2012 அன்று பணிநிறைவு பெற்றதால் புதிய கோட்டத்தலைவர்க்கான தேர்வு நடைபெற்றது.  உதவித்தலைவர் தோழர் K. கதிர்வேல் அவர்கள் கோட்டத்தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  புதிய கோட்டத்தலைவர்க்கான தேர்வை உதவித்தலைவர் தோழர் S. விஜயகுமார் அவர்கள் நடத்தி வைத்தார்.  

அதன்பின் அமைப்புச்செயலர் தோழர் R.வரதராஜன் நன்றி கூற அனைத்து உறுப்பினர் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

                                                                    

NFPE, Srirangam

No comments:

Post a Comment