NFPE

Friday 28 December 2012

WE GOT SUCCESS IN LSG AND MDU PTC ISSUES


அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கங்கள் ! நேற்றைய வலைத்தளச் செய்தியில் நாம் தெரிவித்த படி , நமது முன்னாள் பொதுச் செயலரும் Leader, staff side , JCM DC ஆகவும் உள்ள தோழர் KVS அவர்கள் இன்று நடைபெற்ற JCM கூட்டத்தில் பல் வேறு பிரச்சினைகள் குறித்து இலாக்கா முதல்வருடனும் , POSTAL BOARD MEMBER களுடனும் விவாதித்துள்ளார் . அவை குறித்த விரிவான செய்திகளை நாளை விரிவாக வெளி யிடுகிறோம்.

நாம் அவரிடம் கூறியிருந்த இரண்டு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதன் முடிவுகள் கீழே அளித்துள்ளோம்.

1. தமிழ்க் அஞ்சல் நிர்வாகம் LSG பதவி உயர்வு அளிப்பதில் எடுத் துள்ள முடிவான CONFIRMATION அடிப்படையில் SENIORITY நிர்ணயம் செய்து பதவி உயர்வு அளிப்பது என்பது நிறுத்தப்படும் . ஏற்கனவே JCM கூட்டத்தில் உள்ள இதே பிரச்சினை குறித்து இறுதி முடிவு எடுக்க விரைவில் ஊழியர் தரப்புடன் பேசி முடிவு எடுக்க தனியே ஒரு கூட்டம் கூட்டப் படும். இதில் ONE TIME MEASURE ஆக DATE OF APPOINTMENT ஐ வைத்து SENIORITY நிர்ணயம் செய்து பதவி உயர்வு வழங்கிட ஊழியர் தரப்பில் வலியுறுத்தப்படும்.

2. தமிழகத்தில் PTC DIRECTOR இன் தவறான உத்திரவால் INDUCTION TRAINING இல் 60% மதிப்பெண் பெறவில்லை என்று காரணம் கூறி பதவி இறக்கம் செய்யப்பட்ட அனைத்து SORTING ASSISTANT தோழர்களும், இந்த உத்திரவு ரத்து செய்யப்பட்டு உடன் அவர்களது SORTING ASSISTANT பதவியில் பணியமர்த்தப் படுவார்கள்.

நமது அகில இந்திய சங்கத்திற்கும் குறிப்பாக தோழர் KVS அவர் களுக்கும் தமிழக அஞ்சல் மூன்று , தமிழக RMS மூன்று சங்கங் களின் சார்பாக நம் நெஞ்சார்ந்த நன்றி இது தமிழக மாநிலச் சங்கங்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி . முன்புபோல அல்லாமல் , தமிழக அஞ்சல் மூன்று அங்கீகாரம் பெற்ற பிறகு , தமிழகத்தின் அனைத்து NFPE மாநிலச் சங்கங்களும் ஒரே அணியாக, NFPE என்ற ஒரே சக்தியாக செயல் படுவதால் கிடைத்த வெற்றியாகும்

இன்று நடைபெற்ற JCA போராட்டம் குறித்த விரிவான செய்திகள்
பின்னர் வெளியிடப்படும்

தோழமையுடன்
JR , மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று .

No comments:

Post a Comment