NFPE

Saturday 15 December 2012

Draft Seniority List of Postal Assistants as on 01.01.2011 who are appointed prior to 04.11.1992



அன்புத் தோழர்களே ! நம்முடைய CPMG அவர்களால் LSG பதவி உயர்வுக்கு உரிய P .A . DRAFT SENIORITY LIST 12.12.2012 அன்று வெளியிடப்பட்டு அனைத்து கோட்டங்களுக்கும் ஊழியர்களின் சுற்றுக்கு விடப்பட்டு உள்ளது. இதில் ஏதேனும் குறைகள் அல்லது seniority தவறுதலாக கணிக்கப் பட்டிருந்தால் 31.12.2012 க்குள் அந்தந்த ஊழியர்கள் உடன் இது குறித்து CPMG அவர்களுக்கு உரிய விபரத்தோடு மனுச் செய்ய வேண்டும். இல்லையேல் இதனை மாற்ற இயலாது என்று தெரிவித்துள்ளார்கள்.

இறுதி செய்யப்பட பட்டியலின் அடிப்படையில் 01.01.2013 க்குப் பிறகு LSG பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்படும் . இதில் ஏதேனும் பிரச்சினை இருப்பின் உடன் மனுச் செய்யவில்லை என்றால் பின்னர் மாநிலச் சங்கத்தை அணுகிப் பிரயோசனமில்லை . பிரச்சினைகள் அதிகம் ஏற்பட்டு மேலும் சிக்கல்கள் ஏற்படும் என்றும் இதனால் அனைவரின் பதவி உயர்வும் பாதிக்கப் படும் என்பதையும் உடன் சுட்டிக் காட்டுகிறோம். எனவே கோட்ட/கிளைச் செயலர்கள் இந்த பிரச்சினையில் கவனத்துடன் உடன் செயல் பட வேண்டுகிறோம் . இது உங்கள் பொறுப்பு ஆகும்.

இது 04.11.1992 க்கு முன்னர் பணியில் அமர்ந்தவர்களின் பட்டியல் மட்டுமே . ஏனெனில் அந்த தேதிக்கு பிறகு seniority என்பது order of merit அடிப்படையில் தயாரிக்கப் பட வேண்டும் என்பது இலாக்கா விதி. 04.11.1992 க்கு முன்னர் பணியில் அமர்ந்தவர்களுக்கு seniority என்பது date of confirmation ஐ வைத்து தயாரிக்கப் படவேண்டும் என்பதும் இலாக்காவின் விதி.

இதற்கு முன்னர் 01.07.2008 இல் வெளியிடப்பட்ட seniority list அடிப்படையில் LSG பதவி உயர்வுகள் போடப்பட்டு வந்தன . அந்த அடிப்படையிலேயே நாம் LSG பதவி உயர்வை இந்த முறையும் அளிக்க வேண்டும் என்று கோரினோம். ஆனால் அது தவறாகப் போடப்பட்டு உள்ளதாகவும் அதை அடிப்படையாக வைத்து புதிய LSG பதவி உயர்வு அளிக்க முடியாது என்றும் CPMG அலுவலகத்தில் நம்மிடம் தெரிவித்தார்கள் . இது குறித்து நம் மாநிலச் சங்கத்தில் கடந்த 04.12.2012 இல் விரிவாக கடிதம் அளித்து விவாதித்தோம். இந்த கடித நகல் ஏற்கனவே நம் மாநிலச் சங்க வலைத்தளத்தில் பிரசுரிக்கப் பட்டுள்ளது. அதை older post இல் சென்று பார்க்கவும். SENIORITY நிர்ணயிப்பதில் தவறு உள்ளது நமது கடிதத்தில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது . எனவே புதிய SENIORITY LIST தற்போது தயாரிக்கப் பட்டு சுற்றுக்கு விடப்பட்டுள்ளது.

எது எப்படி இருப்பினும் நமது சங்கத்தின் நிலைப்பாடு என்பது ஏற்கனவே 06.01.2009 போராட்டத்தின் பின்னணியில் 13.1.2009 இல் MINUTES நகலில் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் 01.03.2012 இல் இலாக்காவால் வெளியிடப்பட்ட JCM இலாக்கா குழு கூட்டத்தின் OFFICIAL MINUTES ITEM NO . 16 ன் படி நாம் மீண்டும் இதனை தெளிவு படுத்தியுள்ளோம் இந்த MINUTES நகல் அகில இந்திய சங்கத்தின் வலைத்தளத்தில் ஏற்கனவே பிரசுரிக்கப் பட்டுள்ளது என்பதையும் உங்களுக்கு அறிவிக்கிறோம் . அதன்படி

16. Anomaly in the preparataion of PA gradation list. Date of confirmation should not be taken now and date of appointment be taken for construing seniority. Fixing seniority based on the date of confirmation is unconstitutional and discriminatory on dropping of confirmation examination.

Reply: It was agreed to refer the matter to the Committee constituted to consider under item no. 13.


ஏனெனில் , REVISED LSG RECRUITMENT RULES வெளியிடப்படுவதற்கு முன்னர், அல்லது TBOP /BCR FINANCIAL UPGRADATION என்று அறிவிக்கப்படுவதற்கு முன்னர் LSG என்பது DIVISIONAL SENIORITY (divl cadre)அடிப்படையில் தான் இருந்தது . அப்போது CONFIRMATION என்பது சில கோட்டங்களில் முன்னதாகவும் பல கோட்டங்களில் 5 அல்லது 6 ஆண்டுகள் கழித்தும் LIEN அடிப்படையில் கிடைத்து வந்தது .

LSG CIRCLE CADRE என்று அறிவிக்கப் படும் போது இந்த முரண்பாடு களையப்பட்டு SENIORITY LIST என்பது DATE OF APPOINTMENT IN THE CADRE OR GRADE என்று வைத்து வழங்கப் பட்டிருக்க வேண்டும். அப்படி செய்யாததால் இது சம உரிமை வாய்ப்பு மறுப்பாகவே கொள்ள வேண்டும்.

இந்த சூழ்நிலையில் , இது குறித்து JCM MINUTES அடிப்படையில் உடன் முடிவு எடுக்க இலாக்காவை நிர்ப்பந்திக்க வேண்டும் என்று நமது அகில இந்திய சங்கத்திற்கும் , சம்மேளனத்திற்கும் நாம் வலியுறுத்திக் கூறியுள்ளோம்.

பார்க்க draft seniority list . கீழே 'கிளிக்' செய்யவும்.

http://tamilnadupost.nic.in/rec/STA_29_CGL_PA_121213.pdf

Posted by All India Postal Employees Union – Group ‘C’ Tamilnadu Circle

No comments:

Post a Comment