NFPE

Wednesday 12 December 2012

நன்றி! நன்றி!! நன்றி!!!






தோழர்களே, தோழியர்களே!

     வணக்கம்.  நமது NFPE சங்கத்தின் அறைகூவலுக்கிணங்க 12.12.12 அன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துக்கொண்டு நமது ஒற்றுமையை உணர்த்திக்காட்டிய அனைத்து தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் நமது கோட்டத்தின் JCA சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.



 நமது கொள்கைகளும், கூக்குரல்களும்
அதிகாரத்துறைக்கு உணரும்படி
பறை சாற்றுவோம் !               
பாரதிதாசன் பகர்ந்தது போல்
ஓடப்பர் எல்லாம்
ஒப்பப்பராய் மாறும் காலம்
2013 – ல் மலரட்டும் !
வரும் புத்தாண்டில் – நம்
நாட்டின் வறுமைகள்
நசுங்கிப் போகட்டும் !
தொழிற்சங்க கொள்கைகள்
தொடர்வண்டி சக்கரம் போல்
எங்கும் பரவட்டும் !
ஏற்றத்தை எதிர்பார்ப்போம் !
மாற்றங்களை வரவேற்போம் !
விண்ணைத்தொடும் விலைவாசியை
வேலைநிறுத்தம் வாயிலாய்
மண்ணைக் கவ்வச் செய்வோம் !
புதுப் பென்சன் திட்டத்தை
பொடிப் பொடியாய் உதிர்ப்போம் !
ஒற்றுமையுடன் – நம்
உதிரத்தின் மேல்
சபதம் செய்வோம் !
“சங்கம்” எனும் சங்கு ஊதி
“ஒற்றுமை”யை வில்லாக்கி
“கொள்கை”களை நாணேற்றி
“வெற்றிக்கனியை” எட்டிப் பறிப்போம் !
வாழ்க NFPE !                                                  வளர்க NFPE !
                                     

NFPE, Srirangam

No comments:

Post a Comment