NFPE

Wednesday 6 June 2012

FAMILY PENSION IS ELIGIBLE TO THOSE WHO COVERED UNDER NPS AND DIED AFTER 1.1.2004



ஒரு முக்கிய செய்தி

அன்புத் தோழர்களே ! வணக்கம். 1.1.2004 க்குப் பின்னர் பணியில் அமர்ந்து , அதற்குப் பிறகு பணியில் இறந்து போன ஊழியரின் மனைவி/ வாரிசு பலர்
இன்னமும் FAMILY PENSION பெறவில்லை என்று மாநிலச் சங்கத்திற்கு
தொலைபேசி மூலம் தகவல் வந்துள்ளது .

புதிய பென்ஷன் திட்டம் இன்னமும் ஒப்புதல் பெறவில்லை என்பதால் அதற்கான தெளிவான உத்திரவு எதுவும் இல்லை என்று மறுக்கப் படுவதாக தெரிய வருகிறது . ஆனால் அப்படி மறுக்கப் பட்டால் அது தவறு .

அதுபோல உங்கள் கோட்டத்தில் ஏதும் பிரச்சினை இருப்பின் உடன் உரிய விபரங்களோடு மாநிலச் சங்கத்திற்கு தகவல் தெரிவிக்கவும் . பாதிக்கப் பட்டநபரை உடன் CPMG,TN அவர்களுக்கு விண்ணப்பிக்கச் சொல்லி அதன் நகலை மாநிலச் சங்கத்திற்கு அனுப்பவும் . நிச்சயம் அவர்களுக்கு FAMILY PENSION பெற்றுத் தர மாநிலச் சங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் !
 


வாழ்த்துக்களுடன் ...
மாநிலச் செயலர்

No comments:

Post a Comment