NFPE

Sunday 24 June 2012

PROGRAMME OF ACTION OF THE CIRCLE UNION ON SALEM WEST AFFAIRS



சேலம் மேற்குக் கோட்டக் கண்காணிப்பாளரின் ஊழியர் விரோதப் போக்கைக் கண்டித்து

ஊழியர்கள் மீது காழ்ப்புணர்ச்சியில் எடுக்கப் பட்ட பழிவாங்கும் நடிவடிக்கைகளை ரத்து செய்திடக் கோரி

பொய்யான பயணப்படி , உணவுக்கட்டணம், தங்குமிடம் குறித்து அவர் பெற்ற லட்சக் கணக்கான ரூபாய் அரசுப் பணத்தை உடன் கண்காணிப்பாளரிடம் இருந்து பிடித்திடக் கோரி

CCS ( CCA) RULES 1965 விதி 14 இன் கீழ் அந்த விதியில் சொல்லியபடி பொய்யான பயணப் படி பெற்றது குறித்து கண்காணிப்பாளர் மீது உடன்ஒழுங்கு நடவடிக்கை கோரி

உரிய ஆவணங்களுடன் இருமுறை ஊழல் புகார் மாநிலச் சங்கத்தால் அளிக்கப் பட்டும் நான்கு மாதங்களாக உரிய விசாரணை கூட இல்லாமலும் கண்காணிப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமலும் உள்ள
மண்டல நிர்வாகத்தை கண்டித்து

மத்திய சங்கத்தால் உரிய புகார் அளிக்கப் பட்டும் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காமல் ஊழல் அதிகாரியை பாதுகாக்கும் மண்டல நிர்வாகத்தை கண்டித்து

முதற் கட்டம் மாநிலம் தழுவிய அளவில் அனைத்து கோட்ட/கிளைகளிலும்
கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கடிதத் தந்தி

இரண்டாம் கட்டம் மேற்கு மண்டல அலுவலகம் முன்பாக மாநிலச் செயலரின் உண்ணா விரதம்

தோழர்களே ! பாதிக்கப் படுவது சேலம் மேற்கு கோட்ட ஊழியர்கள் அல்ல! நம் சகோதர்களே ! நம் ஒற்றுமையான போராட்டம் முழு வீச்சில் நடைபெற்றால் எந்தவொரு கோட்டத்திலும் இனி எந்தவொரு அதிகாரியும் இதுபோல ஊழியர் விரோத நடவடிக்கையில் ஈடுபட முடியாது
இதுபோல ஊழல் நடவடிக்கையில் ஈடு பட முடியாது
என்பதை நம் போராட்ட வீச்சு பாடமாக அதிகார வர்க்கத்திற்கு புகட்டட்டும் !

போராட்ட தேதியும் மாநிலச் சங்கத்தின் விரிவான சுற்றறிக்கையும்
மத்திய செயற்குழு கூட்டம் முடிந்தபின் வெளியிடப்படும் !

ஒன்று படுவோம் ! நம் சகோதரர்களைக் காப்போம் !
தொடர் போராட்டத்திற்கு தயாராவோம் !

வாழ்த்துக்களுடன்
அஞ்சல் மூன்று மாநிலச் சங்கம், தமிழ் மாநிலம் .

No comments:

Post a Comment