திருவரங்க கோட்டத்தின் 10 - வது ஈராண்டு கோட்ட மாநாடு 19.06.2016 அன்று காலை சரியாக 09.45 மணிக்கு சுமார் 120 தோழர்கள் , தோழியர்கள் கலந்துக் கொள்ள திருவரங்கம் அம்மாமண்டபம் ரோட்டில் உள்ள S.R. கல்யாண மஹாலில் நமது முன்னாள் அகில இந்திய பொதுச்செயலர் அருமைத் தலைவர் தோழர் KVS அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைக்க, நமது சங்கக் கொடியை திருவரங்க கோட்டத் தலைவர் தோழர் K. கதிர்வேல் அவர்கள் ஏற்றி வைக்க 10 - வது ஈராண்டு கோட்ட மாநாடு இனிதே துவங்கியது.
தோழியர் S. சுபஸ்ரீ, PA, ரெங்கநகர் அவர்கள் அசத்தலான ஒரு வரவேற்புரை நிகழ்த்தினார். ஈராண்டு அறிக்கையை கோட்டச் செயலர் தோழர் C. சசிகுமார் அவர்கள் பொதுக்குழு முன் ஒப்புதலுக்காக சமர்பித்தார். அதன் தொடர்ச்சியாக நிதிச் செயலர் ஈராண்டிற்கான வரவு - செலவுகளை அவையின் முன் சமர்பித்தார். அதன்பின் நடந்த புதிய நிர்வாகிகள் தேர்வில் கீழ்க்கண்ட தோழர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
கோட்டத்தலைவர் : தோழர் K. ராஜூ , அஞ்சலகத்தலைவர் , பெரம்பலூர்
செயல்தலைவர் : தோழர் K. கதிர்வேல், SPM, தாத்தையங்கார் பேட்டை
கோட்டச்செயலர் : தோழர் T. தமிழ்ச்செல்வன் , PA, ஸ்ரீரங்கம் HO
நிதிச்செயலர் : தோழர் V. ஸ்ரீதரன் , Treasurer, ஸ்ரீரங்கம் HO
புதிய நிர்வாகிகள் தேர்வு முடிந்த பின் நடைபெற்ற பொதுஅரங்கில் நமது முன்னாள் அகில இந்திய பொதுச்செயலர் அருமைத் தலைவர் தோழர் KVS அவர்கள் 7-வது ஊதியக்குழுவின் இன்றைய நிலைப்பற்றியும், CADRE RESTRUCTURING பற்றியும் நீண்டதொரு விளக்கத்தை அளித்தார்.
அதன்பின் நிதிச்செயலரும், அகில இந்திய உதவி பொதுச்செயலுருமான அருமை நண்பர் A. வீரமணி , மத்திய மண்டலச் செயலர் தோழர் R. குமார், NFPE GDS சங்கத்தின் மாநில நிதிச்செயலரும், திருவரங்கக் கோட்டத்தின் செயலுருமான தோழர் R. விஷ்ணுதேவன் மற்றும் முன்னாள் திருவரங்கக் கோட்டதலைவருமான தோழர் M. திருசங்கு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மதியம் 02.00 மணி க்கு உணவு இடைவேளை விடப்பட்டு மறுபடியும் 03.00 மணிக்கு அவை தொடங்கியது. அருமைத் தலைவர் KVS அவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் சுமார் 60 க்கும் மேற்பட்ட கேள்விகள் வரை கேட்கப்பட்டது. அனைத்துக் கேள்விகளுக்கும் இன்முகத்துடன் அருமைத் தலைவர் KVS அவர்கள் பதிலுரைத்தார். மாலை 04.45 மணிக்கு நிதிச்செயலர் தோழர் V. ஸ்ரீதரன் அவர்கள் நன்றி கூற திருவரங்க கோட்டத்தின் 10 - வது ஈராண்டு கோட்ட மாநாடு சிறப்பாக நிறைவுற்றது.

No comments:
Post a Comment