NFPE

Wednesday, 29 June 2016

CG EMPLOYEES DISAPPOINTED- INDEFINITE STRIKE FROM JULY 11TH

7-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை அதிகரித்து மத்திய அமைச்சரவை இன்று (புதன்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது. இதன் மூலம் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் என சுமார் 1 கோடி பேர் பயனடைய உள்ளனர். 7-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 ஆக இருக்கும். அதிகபட்ச ஊதியம் ரூ.2.50 லட்சமாக இருக்கும். புதிய ஊதிய உயர்வு ஜனவரி 1-ல் இருந்து முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசுப் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் என சுமார் 1 கோடி பேர் பயனடைவர். ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்படுவதால் மத்திய அரசுக்கு ரூ.1.02 லட்சம் கோடி வரை கூடுதல் நிதி சுமை ஏற்படும்.

பரிந்துரையும் திருத்தமும்..

மத்திய அரசு துறைகளில் பணியாற்றி வரும் கடைநிலை ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் இருந்து 14.27 சதவீதம் வரை ஊதியத்தை உயர்த்தலாம் என கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் 7வது ஊதிய குழு பரிந்துரைத்திருந்தது. 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவில் ஊதியத்தை உயர்த்த 7வது ஊதியக் குழு பரிந்துரை செய்ததால், அதை திருத்த அமைச்சரவை செயலர் பி.கே.சின்ஹா தலைமையிலான செயலர்கள் குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து சமீபத்தில் தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் நிதியமைச்சகம் குறிப்பு தயாரித்து அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. பி.கே.சின்ஹா தலைமையிலான அமைச்சரவை செயலர்கள் குழு, மத்திய அரசு ஊழியர்களுக்கு மொத்தமாக 23.55 சதவீதம் வரை ஊதியத்தை உயர்த்தலாம் என பரிந்துரைத்தது. ரூ.7 ஆயிரமாக உள்ள குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18 ஆயிரமாகவும், ரூ.90 ஆயிரமாக உள்ள அதிகபட்ச ஊதியத்தை ரூ.2.5 லட்சமாகவும் உயர்த்தலாம் என்ற 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையையும் அமைச்சரவை செயலர்கள் குழு திருத்தியது. அதில் குறைந்தபட்சமாக ரூ.23,500 ஆகவும், அதிகபட்சமாக ரூ.3.25 லட்சமாகவும் ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. திருத்தப்பட்ட இந்தப் பரிந்துரைக்கே மத்திய அரசு இன்று ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படியே மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை அதிகரித்து மத்திய அமைச்சரவை இன்று (புதன்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் அதிருப்தி:

இந்நிலையில், 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவில் ஊதியத்தை உயர்த்த 7வது ஊதியக் குழு பரிந்துரை ஏற்புடையதாக இல்லை எனக் கூறி மத்திய அரசு ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். விலைவாசிக்கேற்றவாறு ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment