NFPE

Wednesday 8 June 2016

ALL INDIA CALL - THREE STAGE PROGRAMME OF ACTION ENDING WITH STRIKE TO SETTLE FINACLE/Mc CAMISH ISSUES

                      

                                       NFPE
      அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்குரூப் 'சி ’
     தமிழ் மாநிலம் , தேனாம்பேட்டை, சென்னை 600 018.

சுற்றறிக்கை  எண் : 5                                                               நாள் : 07.06.2016

பெறுநர்: மாநிலச்சங்க நிர்வாகிகள் / கோட்ட/ கிளைச் செயலர்கள், மாநில மகிளா கமிட்டி உறுப்பினர்கள்.

அன்புத் தோழர்களே !  தோழியர்களே !   வணக்கம் !

FINACLE, MC CAMISH பிரச்சினைகளை தீர்த்திடக் கோரி
அகில இந்திய அளவில் மூன்று  கட்ட போராட்டம்

        நாம் எத்தனை முறை தொடர்ந்து  பிரச்சினைகளை எடுத்தாலும், ஆர்ப்பாட்டம், தார்ணா, வேலை நிறுத்தம் என்று செய்தாலும் FINACLE ,  Mc CAMISH தொடர்பான  பிரச்சினைகள் இன்றுவரை முழுமையாக தீர்க்கப் படவில்லை.  BANDWIDTH குறைவாக  இருப்பதால்  ACCESS இல்லை என்று போராடி ஒரு வழியாக இன்று எல்லா ‘B’ மற்றும்  ‘C’ அலுவலகங்களிலும்  BANDWIDTH அளவை  அடுத்த நிலைக்கு உயர்த்தி உத்திரவு பெற்றது மட்டுமல்லாமல் இன்று தமிழக அஞ்சல் வட்டத்தில் கடந்த ஏப்ரல்  வரை 1933அலுவலகங்களில் அலைக்கற்றை அளவு அடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டதாக CPMG அவர்கள் நம்  மாநில  சங்கத்திடம் எழுத்து பூர்வமாக தெரிவித்துள்ளார்கள்.

        ஆனாலும் பிரச்சினைக்கு அது மட்டுமே  காரணமல்ல என்பதை  நாம் கண்டறிந்து , உடனடியாக DATA CENTRE இல் SERVER இன் அளவு  உயர்த்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தோம். கடந்த28.3.2016 அன்று இது குறித்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடனடியாக  இரண்டு ADDL SERVER கள்DATA  CENTRE இல் நிறுவப்படும் என்ற உத்திரவாதத்தை MEMBER (P) அவர்களும்  MEMBER (TECH) அவர்களும் நம்முடைய பொதுச் செயலரிடம் உறுதியாகத் தெரிவித்தார்கள். எனவே FINACLE SLOWNESSஅல்லது  ACCESS பிரச்சினை தீர்க்கப்படும் என்று நாம் நம்பினோம் .  பொதுச் செயலரின் உறுதியை ஏற்று தமிழகத்தில் நடத்துவதாக முடிவெடுக்கப்பட்ட போராட்டங்களை தள்ளி வைத்தோம்.

        ஆனால் இரண்டு மாதங்கள் கடந்த பிறகும் உறுதியளித்தபடி ADDL SERVER கள் நிறுவப்படவில்லை. மாறாக BUSINESS CONTINUITY PLAN என்று  ஒரு உருப்படாத  உத்திரவை இலாக்கா இன்று மீண்டும் இட்டுள்ளது. எனவே இது குறித்து கடந்த 25.5.2016  அன்று நம்முடைய பொதுச் செயலரிடம் தொலைபேசியிலும் கடிதம் மூலமும் நம்முடைய மாநிலச் சங்கத்தின் உணர்வுகளை எடுத்துச் சென்றோம். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க,  நாடு தழுவிய தொடர் போராட்டமும்  வேலை நிறுத்தமும் வேண்டும் என்று கோரினோம். மேலும்  FINACLE, MC CAMISH தொடர்பான தினசரி சந்திக்கும் இதர பிரச்சினைகளை தொகுத்து பொதுச்செயலரிடம் அளித்தோம். இதன் அடிப்படையில் கடந்த 26.5.2016  அன்று பிரச்சினைகளை தொகுத்து  நம்முடைய அகில இந்திய சங்கம்  தெளிவான கடிதம் இலாக்காவிடம் அளித்தது . மேலும் கடந்த 27.5.2016அன்று கீழ்க்காணும் கோரிக்கைகள் மீது மூன்று கட்ட போராட்டத்தையும்  தொடர்ந்த வேலை நிறுத்த அறிவிப்பையும் நம்முடைய அகில இந்திய சங்கம் அறிவித்துள்ளது .  அதன்படி
 
10.06.2016    -   அனைத்து கோட்ட மற்றும் கிளைகளில் கோரிக்கைகளை                  வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
17.06.2016    -   CHIEF PMG  அலுவலகம் முன்பாக முழு நாள் தார்ணா                      போராட்டம்.
30.06.2016    -   புது டெல்லியில் DAK BHAVAN முன்பாக ஆர்ப்பாட்டம் –                       வேலை நிறுத்த நோட்டீஸ் அளித்தல்.வேலை நிறுத்த                      தேதி என்பது JCA மற்றும்  NFPE இன் இதரசங்கங்களை                     கலந்துகொண்டு முடிவு செய்யப்படும் .

                                                 கோரிக்கைகள்

1. உறுதி அளித்தபடி உடனடியாக ADDL SERVER களை நிறுவி  FINACLE ACCESS பிரச்சினையை தீர்த்து வை.
2. உறுதி அளித்தபடி நாடு முழுதும் அனைத்து அலுவலகங்களிலும் BANDWIDTH அளவை உயர்த்து.
3. COUNTER BUSINESS HOURS பிரச்சினையில் இலாக்கா உத்திரவை உடனடியாக அமல்படுத்து.
4. FINACLE பிரச்சினையில் சேவைக் குறைபாடு என்று அளிக்கப்பட்ட அனைத்து பழி வாங்கும்
  நடவடிக்கைகளையும் ரத்து செய்.
5. 26.5.2016 இல் அளிக்கப்பட்ட கடித்தத்தில் கூறப்பட்ட எல்லா பிரச்சினைகளையும் உடனே தீர்த்து வை.

        எனவே அனைத்து கோட்ட  மற்றும் கிளைகளில் முதற் கட்ட ஆர்ப்பாட்டத்தை தவறாமல் நடத்திட வேண்டுகிறோம். அனைத்து கிளைகளின் போராட்ட நிகழ்வை புகைப்படம் எடுத்து மாநிலச் சங்க EMAIL முகவரிக்கு உடனடியாக அனுப்பிட வேண்டுகிறோம். 

     இரண்டாவது கட்ட  தார்ணா  போராட்டத்தில் தமிழகத்தின் அனைத்து கோட்ட / கிளைகளில் இருந்தும் நிர்வாகிகள் முழுமையாகக் கலந்துகொண்டு அஞ்சல் நிர்வாகத்திற்கு நம்  முழுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுகிறோம். தீவிரமான போராட்டம் ஒன்றே  தீர்வுக்கு வழி .

ஒன்று படுவோம் !    போராடுவோம் !   வெற்றி பெறுவோம் !

போராட்ட  வாழ்த்துக்களுடன்

J . இராமமூர்த்தி,

மாநிலச் செயலர்.

No comments:

Post a Comment